"ராத்திரியோடு ராத்திரியாக".. டாக்டர் சரவணனை ஏவியது யார்.. திமுகவின் அரசியல் எதிரி யார்.. பரபர வாதம்
செருப்பு வீசிய விவகாரத்தில் திமுக மென்மை போக்கை கடைப்பிடிப்பது ஏன்
சென்னை: பிடிஆர் காரின் மீது செருப்பு வீசிய விவகாரத்தின், சலசலப்பு இன்னமும் ஓயவில்லை.. குறிப்பாக இது தொடர்பான வாதங்கள், இணையத்தில் றெக்கை கட்டி பறந்து வரும் நிலையில், சில ஆக்கப்பூர்வமான கருத்துக்களும் திமுக அரசுக்கு அரசியல் நோக்கர்கள் முன்வைத்து வருகின்றனர்.
மதுரையில் 2 நாட்களுக்கு முன்பு, திமுக- பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்டது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழகம் முழுவதும் பாஜகவினருக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிண அரசியல்
பிடிஆரை சந்தித்து பேசிய டாக்டர் சரவணன், மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல, மனதில் உள்ள விஷயத்தை நிதிஅமைச்சரிடம் தெரிவித்தேன். பாஜகவை விட்டு விலகுகிறேன், பாஜகவில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார்... இந்த வன்முறைக்கு காரணம் பாஜகதான் என்று திமுகவினர் குற்றஞ்சாட்டினார்.. "பிண அரசியல் செய்யும் நபர்களுக்கு பதில்தர தயாராக இல்லை என்று பிடிஆர் கடுமையாகவே தெரிவித்திருந்தார்.

டாக்டர் சரவணன்
ஆனால், நடந்த சம்பவத்துக்கு காரணம் திமுகதான் என்று பாஜக, பழியை திருப்பி போட்டு குற்றஞ்சாட்டியது.. தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், மதுரையில் நடந்த விரும்ப தகாத நிகழ்வை தூண்டியதே டாக்டர் சரவணன் தான். ஆதாயத்திற்காக மீண்டும் திமுகவில் இணையும் 1 வருட கனவு மற்றும் மதுரை அமைச்சர் மூர்த்திக்கு எதிரான ஒருங்கிணைப்பையும் தனது அடிப்பொடிகளை வைத்து மதுரையில் நாடகம் நடத்தி விட்டார் சரவணன் என்று காட்டமாக கூறியிருந்தார். மேலும், சரவணனின், கட்சி விலகல் திட்டமிட்ட ஒன்று என்றும் பாஜகவினர் விடாமல் சொல்லி வருகிறார்கள்.

தர்மசங்கடம்
இப்படி மாறி மாறி இரு கட்சிகளும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பிடிஆர் கார் மீது செருப்பை வீசிய சம்பவம் குறித்து ஒன் இந்தியா சார்பில் நாம் சில அரசியல் நோக்கர்களிடம் கேள்வி எழுப்பினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது: "முதலில் இந்த விஷயத்தை 2 ஆக பிரித்து பார்க்க வேண்டும்.. ஸ்டாலினின் அணுகுமுறை பாராட்டத்தக்கது.. பொதுவாக, இப்படி ஒரு சம்பவம் நடந்தால், யாராக இருந்தாலும் உடனே ரியாக்ட் செய்துவிடுவார்கள்.. அதிலும் ஆளும் தரப்பு என்றால், எந்த எல்லைக்கும் செல்லலாம்.. அவர்களுக்கு முழு உரிமை உள்ளது.. ஆனால், ஸ்டாலினின் பக்குவம் கவனிக்கத்தக்கது.

ரியாக்ஷன்
உடனடியாக ரியாக்ட் செய்வதால், பாஜகவுக்கு முக்கியத்துவம் தந்தது போல் ஆகிவிடும் என்பதாலும், கலவரம், வன்முறைக்கு திமுகவே காரணமாகிவிடக்கூடாது என்பதற்காகவும், இந்த சம்பவம் நடந்து மறுநாள்தான் முதல்வர் அறிக்கை வெளியிட்டார்.. அதேசமயம், உளவுத்துறை, காவல்துறையிடம் நடந்த சம்பவத்தை விசாரித்து அதனப்படையில் அறிக்கை தயாரானதாக தெரிகிறது.. முதல்வர் ஸ்டாலினின் பக்குவத்தையும், நிதானத்தையும் இது எடுத்துக் காட்டுகிறது.

1 - வது விஷயம்
ஆனால், அதேசமயம், இப்படி ஒரு பொறுமையான அணுகுமுறை பாஜக போன்ற கட்சிகளுக்கு தேவையில்லை.. ஒரு மாநில நிதியமைச்சர் என்பவர், முதல்வரின் பிரதிநிதி.. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அடையாளம்.. அப்படி இருக்கும்போது, செருப்பை வீசுவது என்பது மிகப்பெரிய தவறு.. அதிலும் அந்த காரில் தேசியக்கொடி பறந்து கொண்டிருக்கிறது.. தேசியக்கொடியை அவமதித்துவிட்டு, இப்போது இவர்கள் தேசிய கொடியை தூக்குவதன் பலன் என்ன? தமிழகத்தில் வெறும் 3 சதவீத வாக்குகளை வைத்து கொண்டு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? அதிமுக என்ற கட்சி இல்லையென்றால், பாஜக இங்கே இவ்வளவு அட்டகாசம் செய்ய முடியுமா?

2 - வது விஷயம்
நடந்தது ஏதோ ஒரு முக்கிய சம்பவம் அல்லது உயிரிழப்பு நடந்துவிட்டது என்றால்கூட, ஆத்திரத்தில் இப்படி பொங்கலாம்.. ஒரு சாதாரண விஷயத்துக்கே, இந்த அராஜகத்தை நடத்துவதா? திமுக அரசு தன்னை பரிசீலித்து கொள்ள வேண்டும்.. முக்கியமாக, தங்களுக்கு எதிரி யார் என்று முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.. அதுமட்டுமல்ல, டாக்டர் சரவணன் ஒருகட்சிக்கு போவதும், விலகுவதும் அவரது உரிமை.. ஆனால், சரவணனை உசுப்பியது யார்?.. பிடிஆர்ருக்கு எதிராக பேச வைத்தது யார்? இதைதான் திமுக இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டும்..

3 - வது விஷயம்
3 சதவீத ஓட்டுக்களை உடைய கட்சி, 30 சதவீத ஓட்டு சதவீதம் உடைய திமுகவுடன் மோதுவதை இவர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்? திமுகவை சரமாரியாக பாஜக தினமும் எதிர்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் ஏன் அமைதி காக்கிறது? செருப்பு வீசுவது, சிலைகளை சேதப்படுத்துவது இப்படிப்பட்ட அசிங்க அரசியல் நடத்துவதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும்.. முதல்வரின் அறிக்கையில்கூட காட்டமான வார்த்தைகள், வரிகள் இல்லை.. சட்டத்தை கொண்டு அடக்கினால் மட்டும் போதுமா? எந்த விஷயத்தில் மென்மையாக இருக்க வேண்டுமோ, அதில்தான் மென்மை தேவை... திமுக அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்" என்றனர் நம்மிடம்..!

ஸ்லோ & ஸ்டெடி
எனினும், மதுரை சம்பவத்தை பொறுத்தவரை, திமுக செய்தது சரியே என்றும் இதுபோன்ற விவகாரங்களில் உணர்ச்சிவசப்பட்டு, எந்தவித முடிவையும் எடுத்துவிடாமல் இருப்பது நல்லது என்றும் பரவலான கருத்துக்கள் கூறப்படுகின்றன.. திமுக அரசுக்கு எங்கு எப்போது அதிரடியை காட்டவேண்டும் என்று தெரியும் என்றாலும், இந்த நாட்டு பிரதமரை தமிழ்நாட்டு மண்ணில் கால் வைக்க விடமாட்டோம் என்றெல்லாம் திமுகவினர் அன்று பேசியிருக்கக்கூடாது.. கொள்கை, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மோடி அனைவருக்கும் பிரதமர்.. அன்று திமுக விதைத்த விதைதான் இன்று வெடித்து கிளம்புகிறது என்றும் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் எழுகின்றன.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications