சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டாக்டர் சரவணன்".. திமுக அனுப்பிய அம்பு, எய்தவரிடமே திரும்பி வரும் படலம்.. கஸ்தூரி ஒரே போடு

: டாக்டர் சரவணன் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பிடிஆர் - டாக்டர் சரவணன் விவகாரம் பரபரத்து கிடக்க, நடிகை கஸ்தூரி அது தொடர்பாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்... இது திமுகவுக்கு கடுப்பையேற்றி வருகிறது.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார்.

மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்... பிறகு, ஏர்போர்ட்டில் இருந்து, பிடிஆர் புறப்பட்டுள்ளார். அப்போது அமைச்சரின் கார் பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை எறிந்துள்ளார்.

 ரக்‌ஷாபந்தன் பண்டிகை.. சகோதரனை பார்க்க சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்.. பீகாரில் 4 பேர் வெறிச்செயல்! ரக்‌ஷாபந்தன் பண்டிகை.. சகோதரனை பார்க்க சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்.. பீகாரில் 4 பேர் வெறிச்செயல்!

 டாக்டர் சரவணன்

டாக்டர் சரவணன்

இதுதொடர்பாக போலீசார் பாஜகவை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர்.. இந்த விவகாரத்தில் பாஜக மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன், திடீரென நிதியமைச்சரை அவரது வீட்டில் சென்று சந்தித் பேசினார்.. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மத அரசியலில் ஈடுபடுவது எனக்கு உடன்பாடில்லை... நிதியமைச்சர் காரின் மீது செருப்பு வீசியது விரும்பத்தகாதது... அந்த சம்பவம் மனதை உறுத்திகொண்டே இருந்ததால், தூக்கமும் வரவில்லை... நிதியமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன் என்று விளக்கம் தந்தார்.

டிஆர்பி

டிஆர்பி

இதையடுத்து, டாக்டர் சரவணனை பாஜகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்... ஒரே நாளில் அடுத்தடுத்த நடந்த இந்த நிகழ்வால், தமிழக அரசியலில் சலசலப்பும், விறுவிறுப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.. இந்த நிகழ்வு குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திமுகவின் டிஆர்பி ராஜா ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், "சற்றுமுன் டாக்டர் சரவணன் மதுரை (பாஜக மாவட்ட செயலாளர்) அமைச்சர் அண்ணன் @ptrmadurai அவர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். கீழ்தரமான அரசியல் செய்யும் கேடுகெட்ட பாஜகவை விட்டு விலகுகிறார். #சுயமரியாதை." என்று கூறியிருந்தார்.

 அம்பு விடும் படலம்

அம்பு விடும் படலம்

டிஆர்பி ராஜாவின் இந்த ட்வீட்டை, தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்த நடிகை கஸ்தூரி, டாக்டர் சரவணன் பிடிஆரை சந்தித்தது குறித்து தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார். வழக்கமாக எந்த கட்சியையும் பாகுபாடு இல்லாமல் விளாசி தள்ளுபவர் நடிகை கஸ்தூரி.. அதிலும் ஆளும் திமுக என்றாலும், தனக்கு தவறு என்று தெரிந்தால், அதை டக்கெனெ ஓபனாகவே கேட்டு விடுவார்.. மேலும் துணிச்சலாக விமர்சித்தும் விடுவார்.. அந்தவகையில்தான் இந்த ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்..

Recommended Video

    பாஜகவில் இருந்து விலகிவிட்டேன் - மதுரை சரவணன்
    PAYMENT

    PAYMENT


    அதில், "திமுக அனுப்பிய அம்பு, தன் வேலையை சரியாக செய்துவிட்டு எய்தவரிடமே திரும்பி வரும் படலம்" என்று பதிவிட்டுள்ளார்.. ஏற்கனவே கடுப்பில் இருக்கும் திமுகவினர், கஸ்தூரியின் இந்த ட்வீட்டால் மேலும் கடுப்பாகி உள்ளனர். "அம்பு க்கு ஏன் மாவட்ட தலைவர் பதவி கொடுத்தாங்க, PAYMENT வாங்கி இருப்பாங்களோ" என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.. மேலும் சிலர் துக்க நிகழ்வு உள்ள இடத்தில் எதுக்காக கலவரத்தை உண்டு செய்ய வேண்டும் என்றும் கேட்டு வருகின்றனர்.

    English summary
    Did the DMK deal with Doctor Saravanan's resignation and actress kasturi says about madurai incident டாக்டர் சரவணன் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து கூறியுள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X