"முக்கோண இடி".. ஸ்டாலின் டேபிளில் ரிப்போர்ட்.. கண்விழித்த திமுக.. ஓஹோ "அவங்களா".. சிதறிய பாஜக ப்ளான்
முதல்வர் ஸ்டாலின் தன் வேதனையை வெளிப்படுத்தியதன் பின்னணி வெளியாகி உள்ளது
சென்னை: பொதுக்குழு கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் மற்றும் திமுகவினரிடம், முதல்வர் ஸ்டாலின் ஏன் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார் என்ற தகவல் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது..!!
கடந்த முறை தேர்தலின்போது, திமுகவுக்காக வியூகம் வகுத்து, களமிறங்கி வேலை பார்த்தது ஐபேக் டீம்.. ஆனால், எதிர்க்கட்சிகள் இதை வறுத்தெடுத்ததோ இல்லையோ, திமுகவில் உள்ள சில மூத்த தலைகள் பொருமளவில் பொருமிக்கொண்டே இருந்தனர்..
காரணம், ஐபேக் டீம் வந்ததால்தான், சீனியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்ற புலம்பல்கள் வெடித்தன.. மற்றொரு பக்கம் வாரிசுகளை உள்ளே கொண்டு வர முடியாமல் போகிறதே என்றும் தவித்தனர்..

சீனியர்ஸ்
இதற்கெல்லாம் காரணம் ஐபேக் டீம் என்றும், வடநாட்டில் இருந்து ஆட்களை கொண்டு வந்து அவர்கள் பேச்சை கேட்டு ஸ்டாலின் நடந்து கொள்கிறாரே, திராவிட சித்தாந்தத்துக்கு மாறாக இந்துத்துவத்தை உள்ளே புகுத்த இந்த டீம் முனைந்துவிடுமோ? என்ற சந்தேகங்களையும் ஒருசிலர் கிளப்பி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், என்ன ஆனாலும் சரி, 10 வருடங்களுக்கு பிறகு, இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பு திமுக மேலிடத்துக்கு உறுதியாகவே இருந்தது.. அதன்படி, ஐபேக் டீம் சுற்றிசுழன்று வேலை பார்த்தது..

ஆயத்தம்
களப்பணி என்றால் என்ன என்பதை, தொகுதி வாரியாக, மண்டல வாரியாக, ஒன்றியம் வாரியாக, இறங்கி, தூர்வாரி காட்டியது.. தன் கட்சி மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளும் மெஜாரிட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டதை பார்த்து திமுகவினர் வியந்து போனார்கள். இந்நிலையில், விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது. இதற்காக தேசிய கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.. தமிழகத்திலும் அதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆங்காங்கே கூட்டணி கட்சிகளிடம் துவங்கி உள்ளன.. திமுக ஆட்சிக்கு வந்து இந்த ஒன்றரை வருட காலத்தில், முக ஸ்டாலின் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக தேசிய அளவில் உயர்ந்து காணப்படுகிறார்..

I-PAC டீம்
எனினும், திமுக அரசு மீதான சலசலப்புகள் தற்போது வட்டமடிக்க துவங்கி உள்ளன.. ஆரம்பத்தில் சில கவுன்சிலர்கள், அடுத்த சில நிர்வாகிகள், பிறகு சில மா.செ.க்கள், பிறகு சில மூத்த அமைச்சர்கள் என சர்ச்சைகளில் வரிசையாக சிக்க தொடங்கிவிட்டனர் இதைதான், எதிர்க்கட்சிகள் தங்கள் ஆயுதமாக கையில் எடுத்து திமுகவை டேமேஜ் செய்து கொண்டிருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான் 2 நாளைக்கு முன்பு, திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வேதனையையும், வருத்தத்தையும் நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தினார்.. மனம் நொந்து பேசியதுடன், சில அறிவுரைகளையும் மேடையிலேயே எடுத்துரைத்தார்..

I PAC
ஸ்டாலின் இப்படி பேசிக் கொண்டிருந்தபோதே, டிஆர் பாலுவின் செருப்பு விவகாரம் உடனே சர்ச்சையாகிவிட்டது. இதுஒருபுறம் இருந்தாலும், ஸ்டாலினின் இந்த உருக்கமான பேச்சு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறி வருகிறது.. இந்த பேச்சு குறித்த கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஸ்டாலின் ஏன் மேடையில் அவ்வாறு பேசினார் என்பது குறித்த தகவல் ஒன்று கசிந்து வருகிறது.. முதல்வர் அப்படி பேசுவதற்கு காரணமே ஐபேக் டீம் தானாம்..

ஸ்கிரிப்ட்கள்
மதம் தொடர்பான பேச்சுகளும் அமைச்சர்கள் சிலரது சர்ச்சைக்குரிய கருத்துகளும் நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில், ஆட்சி மீதான அதிருப்தி மெல்ல கிளம்பி வருவதாக ஐபேக் டீம் ஒரு ரிப்போர்ட்டை தந்ததாம். அதனால்தான், முதல்வர் வெளிப்படையாகவே வேதனையை கொட்டியதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, பொது நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் என்ன பேசவேண்டும் என்பது குறித்த ஸ்கிரிப்ட்களை தயாரிக்கும் பொறுப்பும் ஐபேக் டீமிடம் தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்... அதோடு, அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுகளை கண்காணிக்கும் பொறுப்பையும் டீம் மேற்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்..

சபாஷ் திமுக
திமுக மேலிடம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்பையே பெற்று வருகிறது.. "அமைச்சர்களின் இலாகா விரைவில் மாற்றம், மா.செ.க்கள் மாற்றமா?" என்பது போன்ற செய்திகள் அவ்வப்போது, இணையத்தில் வெடித்து வந்தாலும், அப்படி ஒரு அதிரடி முடிவை முதல்வர் ஸ்டாலின் இதுவரை யார் மீதும் எடுக்கவில்லை.. மென்மைப்போக்குடன் அனைவரையும் அரவணைத்தே செல்கிறார் என்றாலும், சமீபகாலமாக சில மூத்த அமைச்சர்களின் சர்ச்சைகள், சலசலப்புகளை கூட்டிவிட்டன.. மேலும், இவைகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவும் முயல்வதாக கூறப்படுகிறது.. இந்த நேரத்தில்தான், விழித்துக்கொண்ட திமுக, ஐபேக் மூலம் சீனியர்களுக்கு மறைமுக செக் வைத்ததுடன், எதிர்க்கட்சிகளின் வியூகங்களையும் நொறுக்கி தள்ளியுள்ளது என்கிறார்கள்..!!!

கருப்பு ஆடு
இன்னொரு தகவலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அரசு சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களை எதிர்க்கட்சி முகாம்களுக்கு ஒருசில அதிகாரிகள் கசியவிடுவது, முதல்வரின் காதுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.. அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களில், நடப்பதுகூட, சில சமயம், எதிர்முகாமுக்கு சென்றுவிடுகிறதாம்.. இதுகுறித்து, முதல்வரே நேரடியாக கேட்டுவிட்டாராம்.. ஆலோசனை கூட்டங்களில் பேசுவது எதிர்தரப்புக்கு போவது எப்படி? என்று காட்டமாக கேட்டு கண்டிப்பு காட்டியதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, கடந்த 3 மாத காலத்துக்கு முன்பேயே, அதிகாரிகளில் சிலர் இப்படி ஃபைல்களை எதிர்முகாமுக்கு நகர்த்துவதாக மீடியாவில் செய்திகள் வட்டமடித்தன.. அந்த கருப்பு ஆடுகள் யார் என்பதை கண்காணிக்க திமுக மேலிடம் விரைவில் புது டீமை களமிறக்க போவதாகவும் கூறப்பட்ட நிலையில், அதுகுறித்தும் ஆக்ஷனில் இறங்கி உள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்..!!
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்












Click it and Unblock the Notifications