இதெல்லாம் நிஜமா? அப்ப திமுக கிட்ட நெருங்கிட்டாரோ அண்ணாமலை.. "ஜாக்ரதை, கவனம்".. படக்னு பார்த்த அதிமுக
சென்னை: போற போக்கை பார்த்தால், தமிழக பாஜக 3வது அணியை உருவாக்கி போட்டியிடும் என்றே தெரிகிறது.. அதற்கேற்றவாறு, அக்கட்சியின் வியூகங்களும் பலமாகி கொண்டேயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிட்ட நிலையில், அதிமுகவுடன் இதுவரை யாருமே கூட்டணி வைக்கவில்லை.. ஜிகே வாசன், ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏசி சண்முகம் உள்ளிட்ட பலரும் ஆதரவாக இருக்கிறார்களே தவிர, கூட்டணியில் உறுதியாக இணைவதாக சொல்லவில்லை.. அதேசமயம், பாஜக பக்கமும் இவர்கள் யாருமே சாயவில்லை, ஆதரவும் தரவில்லை..

பூவை ஜெகனின் புரட்சி பாரதம், தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் எடப்பாடிக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறார். அதேபோல, ஐஜேகே பாரிவேந்தர் மட்டும் பாஜகவுக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறார். மற்றபடி வேறு யாருமே கூட்டணியை உறுதி செய்யவில்லை.
குழப்பம்: எனினும், அதிமுகவிடம் யாருமே கூட்டணியை உறுதி செய்யாமல் இருப்பதே, பாஜகவுக்கு பெருத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நடுநிலையுடன் குழப்ப மனநிலைமையில் இருக்கும் கட்சியை, பாஜக பக்கம் கொண்டுவரும் வேலையும் ஆரம்பமாகி உள்ளதாம்.
அதேபோல, இந்த முறை தேர்தலில், அனைத்து சமுதாய ஓட்டுக்களும், பாஜகவுக்கு கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதால், இதற்கான வியூகங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகறது.
கூட்டணி: இந்நிலையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டாராம் மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது, "தெலுங்கானாவில், சந்திரசேகர ராவின் குடும்ப அரசியல் பற்றியும், ஊழலை பற்றியும் அதிகமாக பேசியது நாம்தான்.. அக்கட்சியை விமர்சித்ததுடன், பல கேள்விகளையும் எழுப்பியிருந்தோம். ஆனால், அதன் பலனை பலமான கட்டமைப்பு வைத்துள்ள காங்கிரஸ் அறுவடை செய்துவிட்டது.
அதுபோலவே, திமுகவின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பற்றி, தமிழ்நாட்டில் நாம்தான் அதிகமாக பேசிவருகிறோம்.. அதிமுகவை விட அதிகமாக நாம்தான் பேசி வருகிறோம்.. இங்கும் திமுகவுக்கு கட்டமைப்பு பலமாக உள்ளது.. அதனால், அதன்பலனை அதிமுக அறுவடை செய்துவிட கூடாது.. சற்று ஜாக்கிரதையுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்" என்றாராம்.
அதிருப்தி: ஆக, அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், ஆளும் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை யார் அள்ள போவது? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.!!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications