2022ல் நடந்த 2 பெரிய சம்பவங்கள்! "பாபா வான்கா" சொன்னது அப்படியே பலித்தது? அப்போது அதுவும் நடக்குமா?
சென்னை: 2022ம் ஆண்டிற்காக பாபா வான்கா வெளியிட்ட கணிப்புகளில் ஏற்கனவே 2 கணிப்புகள் நடந்துவிட்டதாக அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வாதம் வைத்து வருகின்றனர். இதற்கான ஆதாரங்களையும் பலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. இவர் 1996லேயே இறந்துவிட்டார். இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார்.
5079ம் ஆண்டு உலகம் அழியும் என்று இவர் கணித்து உள்ளார். அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார்.

கணிப்புகள்
இவருக்கு 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது. அப்போதில் இருந்தே இவர் உலகில் நடக்க போகும் விஷயங்களை கணிப்புகளாக வெளியிட்டு சென்றுள்ளார். எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி உள்ளார். கடவுள் தனக்கு கொடுத்த சக்தி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இரண்டு விஷயம்
அதன்படி 2022ம் ஆண்டில் நடக்கும் என்று வான்கா கணித்த விஷயங்களில் இரண்டு விஷயங்கள் ஏற்கனவே நடந்துவிட்டதாக அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வாதம் வைத்து வருகிறார்கள். அதன்படி 2022ல் ஆஸ்திரேலியாவில் பெரிய வெள்ளம் ஏற்படும் என்று வான்கா கணித்து இருந்தாராம். அதோடு ஆசியாவில் பல நகரங்களில் பெரிய வெள்ளம் ஏற்படும் என்று கணித்து இருந்தார்.

கணிப்பு
அதன்படியே இந்த வருடம் அடுத்தடுத்து பல முறை ஆஸ்திரேலியாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சிட்னியில் வெள்ளம் ஏற்பட்டது. அதோடு அங்கு ஏற்பட்ட மழை காரணமாக Hawkesbury Nepean ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பல ஆயிரம் வீடுகள் நீருக்குள் மூழ்கின. இதுவரை ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன, 55 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து உள்ளனர். சிட்னிதான் இந்த வெள்ளம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்
அதேபோல் ஆசியாவில் சீனாவில் 10க்கும் மேற்பட்ட தென் மாகாணங்கள், இந்தியாவில் குஜராத், நேபாளம் போன்ற பகுதிகளிலும் வான்கா சொன்னது போலவே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது போக வான்காவின் இன்னொரு கணிப்பு, பெரிய நகரங்களில் இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படியே போர்ச்சுகல், இத்தாலியில் இந்த வருடம் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு தண்ணீரை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் பஞ்சம்
அதேபோல் பிரிட்டனில் வெப்ப அலைகள் காரணமாக நீர் வரத்து குறைந்துள்ளது. அங்கு இதனால் கடந்த 2 வாரமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு பாருங்கள் வான்கா சொன்னது நடந்துவிட்டது என்றுள்ளனர். அதே சமயம்.. இதை எல்லாம் எல்லோருமே கணிக்கலாம்.. 20 வருடம் கழித்து வெப்பம் அதிகரிக்கும் என்று நாமே கணிக்க முடியும். இது எப்படி சக்தியாகும்? எல்லாம் கதை விடுகிறார்கள் என்று வான்காவை விமர்சனம் செய்பவர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

முன்பு எப்படி?
இதற்கு முன் உலகின் பல முக்கிய நிகழ்வுகளை இவர் துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. உதாரணாமாக 9/11ல் அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்களை இவர் கணித்து உள்ளாராம்.

2022 கணிப்புகள்
2022ம் ஆண்டில் நடக்கும் என்று இவர் வேறு சில கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார்
2022ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து அட்டாக் செய்யும்.
உலகம் முழுக்க வெப்பநிலை உயர்ந்து கடல் மட்டம் அதிகரிக்கும்
2022ல் அதிக அளவில் சுனாமி ஏற்படும்.
2022ல் பூமிக்கு ஏலியன் வரும்.
2022ல் முழுக்க முழுக்க உலகம் ஏஐ மயம் ஆகும்.
2022ல் புதிய வைரஸ் தாக்கும் என்று இவர் கணித்து உள்ளார்.
இவர் சொன்ன பல விஷயங்கள் நடந்ததாக கூறப்படுவதால் 2022ல் ஏலியன் வரும் என்று இவர் சொன்னதும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications