அப்பட்டமான பொய்.. தமிழ்நாட்டை முந்தி உத்தர பிரதேசம் 2ம் இடம் பிடித்ததா? உண்மையை உடைத்த டேட்டா
சென்னை: தமிழ்நாடு தற்போது ஜிடிபி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் முந்திவிட்டதாக பொய்யான செய்தி ஒன்று பரவி வருகிறது.
ஒரு தனியார் ட்விட்டர் பக்கம் வெளியிட்ட பொய்யான செய்தியில் இருந்துதான் இந்த வதந்தி பரவியது. அந்த நிறுவனம்தான் முதலில் உத்தர பிரதேசத்தில் ஜிடிபியில் இரண்டாம் இடம் பிடித்ததாக கூறியது. அதை தொடர்ந்து வடஇந்திய ஊடகங்கள் பல இதே செய்திகளை வெளியிட்டன.

எல்லா நிறுவனங்களும் சோர்ஸ் என்று கூறியது. ஆனால் உண்மையில் அந்த சோர்ஸ் என்ன என்பதை கூறவே இல்லை. பொதுவாக ஜிடிபி டேட்டா ஒன்றிய புள்ளியியல் துறை மூலம் அல்லது ஆர்பிஐ மூலம் வெளியிடப்படும். ஆனால் இதுவரை ஒன்றிய புள்ளியியல் துறை அல்லது ஆர்பிஐ அப்படி ஒரு டேட்டாவை வெளியிட்டு.. தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் முந்துவிட்டதாக கூறவில்லை.
அண்ணாமலை: பல ஊடகங்கள் இப்படி வடக்கில் கூறிய நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் இதே விஷயத்தை குறிப்பிட்டார். விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் முந்துவிட்டதாக குறிப்பிட்டார். ஆனால் அவரும் அதற்கான டேட்டாவை வெளியிடவில்லை.
இன்னொரு பிரபல ஊடகம் ஒன்றும் உ.பி நாட்டின் 2-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியது என்று கூறியது., உத்தர பிரதேசத்தின் பங்களிப்பு 9.2 சதவீதமாக ஜிடிபி பங்களிப்பில் உயர்ந்துவிட்டதாக கூறியது. தமிழ்நாட்டில் இது 9.1 சதவீதமாக உள்ளது என்றும் .. இதனால் தமிழ்நாடு மூன்றாவது இடம் என்றும் எப்போது போல 15.7 % பங்களிப்புடன் மஹாராஷ்டிரா என்றும் செய்திகளில் பொய்யாக கூறப்பட்டது.
உண்மை என்ன?: இணையத்தில் பரவி வரும் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது ஆகும். தமிழ்நாடு தற்போது ஜிடிபி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. தொடர்ந்து இதே நிலைதான் நீடிக்கிறது.
SOIC என்ற தளம் வெளியிட்ட GDP தரவுகள் அடிப்படையில்தான் இந்த பொய்யான செய்தி பரவுகிறது. அந்த நிறுவனம்தான் உத்தர பிரதேசத்திற்கு 9.2 சதவிகிதம் கொடுத்தது. அந்த நிறுவனம் கொடுத்த எல்லா மாநிலங்களின் கூட்டு தொகை ஜிடிபியை கூட்டினால் 108 சதவிகிதம் வருகிறது. அந்த டேட்டா பொய்யானது, அரைகுறையானது என்பதை உறுதி செய்ய இதுவே பெரிய உதாரணம்.
அதோடு கர்நாடகா டாப் 5 மாநிலங்களில் இல்லை. 6வது இடத்தில் இருந்த உத்தர பிரதேசம்.. இரண்டாம் இடத்திற்கு வந்தது போல டேட்டா மாற்றப்பட்டு உள்ளது. கூட்டு சதவிகிதம் 100 வர வேண்டும் என்ற அடிப்படையை கூட அந்த தளம் கணக்கில் கொள்ளவில்லை.
ஆர்பிஐ தகவல்: உண்மையான ஆர்பிஐ தரவுகளின்படி. கடந்த 2011-2012 ஆம் நிதியாண்டிருந்தே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 31.08 லட்சம் கோடிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு 20.7 லட்சம் கோடிகளுடன் எப்போதும் போல "இப்போதும்" இரண்டாம் இடத்தில் உள்ளது. அதன்பின் உத்தர பிரதேசம் 19.7 லட்சம் கோடிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 4ம் இடத்தில கர்நாடகா உள்ளது. இதுவே ஆர்பிஐ வெளியிட்டுள்ள உண்மையான டேட்டா.,












Click it and Unblock the Notifications