Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளர்மதி கிளம்பிட்டாங்க.. அதைவிடுங்க.. ஆலந்தூர் இபி ஆபீஸ் வாசலிலேயே பாய்களை விரித்து.. ஆக்ரோஷ மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் குமுறி வருகிறார்கள்.. இதையடுத்து முற்றுகை போராட்டங்களும் வெடித்து கிளம்பி உள்ளன.
கோடை காலம் நடந்து வருகிறது.. அக்னி வெயில் முடிந்துவிட்டாலும்கூட, வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் நைட் நேரங்களிலும் வெப்பம் அதிகமாக உள்ளது.

மின்தடை: அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் முதியோர், குழந்தைகள், பெண்கள் அவதிப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, சென்னையின் பல்வேறு சுற்றுப்புற பகுதிகளிலும் இதுபோன்று இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

did Valarmathi come to Alandur EB office and What happened at Alandur Electricity Office

சென்னை திருவொற்றியூர், அடையாறு பகுதிகளில் கேபிள் பழுது காரணமாக, நேற்று முன்தினமும் முதல் காலை வரை, மின் தடை நீடித்திருக்கிறது.. இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதால், புழுக்கத்தில் தூங்க முடியாமல் குழந்தைகளும், பெரியவர்களும் அவதிப்படுகிறார்களாம்..

ஆலந்தூர்: ஆலந்தூரிலும் இப்படித்தான், பல பகுதிகளில் கடந்த 20 நாட்களாகவே, மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இந்த மின் தடையை சரி செய்ய கோரி, அதிமுகவின் மாஜி அமைச்சர் வளர்மதி தலைமையில் பொதுமக்களும் நேரடியாகவே சென்று நேற்று முன்தினம் கோரிக்கை மனுவை தந்துள்ளனர்.. அப்படியிருந்தும் அன்றைய தினம் மறுபடியும் கரண்ட் கட் ஆகியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், ஆலந்தூர் எம்கேஎன் சாலையிலுள்ள மின் வாரிய அலுவலகம் எதிரில், பாய்களை விரித்து அமர்ந்து, மறியலில் ஈடுபட்டுவிட்டார்கள்.

முன்னதாக, மாஜி அமைச்சர் வளர்மதியுடன், மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், பகுதி செயலாளர் பரணி பிரசாத் உள்பட அதிமுகவினர் ஆலந்தூர் மின்சார வாரிய அலுவலகத்துக்கு வந்தனர்.. இந்த விஷயம் கேட்டதுமே, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், தொண்டர்ணி துணை அமைப்பாளர் கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மின்வாரிய அலுவலகத்துக்கு வந்து நுழைவு வாசலில் வந்து நின்றுவிட்டனர்..

அப்போது, அங்குவந்த வளர்மதி, உதவி செயற்பொறியாளர் கருப்பையாவிடம் மின் வெட்டு பிரச்னையை சரி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

did Valarmathi come to Alandur EB office and What happened at Alandur Electricity Office

10 வருட ஆட்சி: உடனே, அங்கு வந்த திமுகவினர், "ஏன், 10 வருஷமாக ஆட்சியில் நீங்க என்ன செய்துட்டு இருந்தீங்க" என்று கேட்டு கோஷமிட்டுள்ளனர்.. இதன்காரணமாக 2 தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.. இந்த சம்பவத்தை தொடர்ந்து வளர்மதி அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்..

அப்போது திமுகவினர், "கரண்ட் போய்ட்டால் இங்கு, உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. இது தெரியாமல், அதிமுகவினர் சொல்லும் தவறான தகவலுக்கு நீங்கள் வரலாமா?" என்று கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.. இதுவே கைகலப்பாகவும் மாறிவிட்டதால், அந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது.. இதற்குபிறகு தகவலறிந்த பரங்கிமலை போலீசார் விரைந்து வந்து திமுக, அதிமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+