"எடப்பாடிண்ணே".. சசிகலா தலைமையில் அதிமுக?.. "எல்லாமே பாழே" திருமாவளவன் சொன்னதுமே, கடுகடுக்கும் பாஜக
திருமாவளவன், மீண்டும் அதிமுகவுக்கு அட்வைஸ் ஒன்றை தந்து அலர்ட் செய்திருக்கிறார்
சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்நபராக வாழ்த்து சொல்லி உள்ளார்.
விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ளது.. 6மாதத்துக்கு முன்பேயே பாஜக இதற்கான முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.. அந்தவகையில் தமிழகத்தை குறி வைத்து, கூடுதலாக காய் நகர்த்தி வருகிறது பாஜக.
எப்படியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக முயற்சிக்கக்கூடும் என்பதால், மிகப்பெரிய கூட்டணி திமுகவுக்கு எதிராக உருவாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திமுகவுடன் மட்டுமே தாங்கள் கூட்டணி என்பதை திருமாவளவன் உறுதிப்படுத்தியபடியே வருகிறார்.

மகா கொம்பன்
"திமுக - விசிக கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைத்துவிட முடியாது.. சிதைத்துவிட முடியாது.. ஏனென்றால், நாங்கள் கொள்கை சார்ந்து ஒன்றிணைந்த கூட்டணியாக இருக்கிறோம்.. தனிப்பட்ட பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அது பேசும் அரசியலை எதிர்க்கிறோம்.. அதன் கொள்கையை எதிர்க்கிறோம்.. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்கே எதிரி என்று எங்களை திசைதிருப்புகிறார்கள்.. பாமகவின் அணுகுமுறைகளை நாங்கள் விமர்சிக்கிறோம்.. அதற்காக நாங்கள் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை" என்று தெளிவுபடுத்தியிருந்தார் திருமாவளவன்.

கருணாநிதி
இப்படி திமுகவுடனான கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போதெல்லாம், அதிமுக குறித்தும் பேசிவருகிறார்.. கடந்த ஒரு வருட காலமாகவே, அதிமுகவின் நிலைமையை பற்றியும் கவலையை வெளிப்படுத்தி வருகிறார். அறிவுரைகளையும் சொல்லி வருகிறார்.. பாஜகவிடம் கவனமாக இருக்கும்படியும் அதிமுகவையும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்.. சமீபத்தில் ஒரு பிரபல சேனலுக்கு திருமாவளவன் ஒரு பேட்டி தந்தபோது சொன்ன வார்த்தைகளை இங்கே நாம் நினைவுகூர வேண்டி உள்ளது. "தமிழ்நாட்டில் கலைஞருக்கு எதிராக அன்று எம்ஜிஆர் இருந்தார்.. அடுத்து ஜெயலலிதா அம்மா இருந்தாங்க.. இப்படி இரு துருவ அரசியல் இங்கே நடந்தது.. இப்படி சொல்வதைவிட, திமுகவுக்கு எதிராக அதிமுக இருந்தது என்று சொல்வதே சரி.. திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளால், காங்கிரசும் பாஜகவும் இங்கே வளர முடியாமல் போனது..

எடப்பாடி பழனிசாமி
ஒருவேளை அதிமுக என்ற கட்சி உருவாகாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் Vs திமுக என்றே இங்கே நீண்ட கால அரசியல் நடந்திருக்கும். தேசிய கட்சியாக காங்கிரஸ் இருப்பதால்தான், இன்னொரு தேசிய கட்சியான பாஜக வளர முடிந்தது.. 2 மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் இடத்தில், 2 தேசிய கட்சிகள் வர முடியாது... அண்ணன் எடப்பாடி பழனிசாமியை நான் நேரில் சந்தித்தால், அதிமுகவை வலிமைப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியை கண்டிப்பாக நான் அவரிடம் கேட்பேன்.. ஜெயலலிதா எம்ஜிஆர்மாதிரி அக்கட்சியை ஒருவர் வழிநடத்தவேண்டும்.. நானே ஒரு அரசியல் கட்சி நடத்துவதால், இன்னொரு கட்சி நலன் பற்றி பேசக்கூடாது.. அதிமுக சிதறினால், அதனால் தங்களுக்கு நன்மை என்றே யாராக இருந்தாலும் நினைப்பார்கள்...

அண்ணன் எடப்பாடி
அதிமுக பலவீனமாக வேண்டும், அதிமுக தொண்டர்கள் சிதறிபோய், தங்கள் கட்சியில் வந்து சேர வேண்டும், அதிமுக அழிந்து போக வேண்டும் என்றெல்லாம் பிற கட்சியினர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.. காரணம், அதிமுக இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கைப்பற்ற நினைக்கிறது. அங்கே பாஜக வரக்கூடாது என்றால், அதிமுக வலுவாக இருக்க வேண்டும்.. அதிமுக இப்போது 3 அணியாக சிதறி கிடப்பதற்கு பாஜகதான் காரணம்.. பாஜக மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்திருக்கும்.. பாஜக தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைத்தனர்.. இப்போது அவங்களையும் உடைத்து விட்டார்கள்...
ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும்" என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகி இருந்தது.. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது...

ஆளுமை
இது ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவை ஏற்படுத்திவரும் அதேசமயம், எடப்பாடியின் ஆளுமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்பட்டு வருகிறது. தீர்ப்பு வெளியானதுமே முதல் நபராக எடப்பாடிக்கு வாழ்த்து சொன்னது திருமாவளவன்தான்.. இதுகுறித்து, ட்விட்டர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், "அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வை சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே" என்று பதிவிட்டிருந்தார்..

ஹோப் திருமா
வாழ்த்துக்களை சொன்னாலும்கூட, மீண்டும் எடப்பாடியை அலர்ட் செய்துள்ளார் திருமாமாவளவன்.. ஒரே அதிமுகவாக இருக்க வேண்டும் என்று திருமா ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இந்த தீர்ப்பு ஓரளவு கட்சிப்பிளவை அகற்றக்கூடும் என்றாலும், பாஜக இதை எவ்வாறு பயன்படுத்தி கொள்ள போகிறது? என்பதைதான் மீண்டும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார் திருமாவளவன்.. அக்கறையும், உரிமையும் கலந்த வேண்டுகோளை அதிமுகவுக்கு தொடர்ந்து விடுத்துவரும் திருமாவளவனின் இந்த ட்வீட்டானது, பாஜகவை மீண்டும் கடுப்பாக்கி வருகிறது.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications