VJ Chithra.. சித்ராவுடன் 4 "புள்ளிகள்".. காருக்குள் என்ன நடந்தது.. அப்ப அந்த மாஜி.. பரபரக்கும் பகீர்
நடிகை சித்ராவின் மரணத்தில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் யார் என்று தெரியவில்லை
சென்னை: நடிகை சித்ரா மரணம் தொடர்பாக 2 விஷயங்கள் தற்போது கசிந்து வருகின்றன.. இதனால் சித்ரா மரணம் தொடர்பான செய்திகள் சோஷியல் மீடியாவில் மீண்டும் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.
சித்ரா இறந்தபோதே, விசாரணை துவங்கிய சமயத்தில் ஏராளமான யூகங்களும், தகவல்களும், வெளியாகின.. கடைத்திறப்பு விழாக்களுக்கு அதிகம் செல்வதால், அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் சித்ராவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்தது.
அதிலும், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களை வரிசையில் ஒரு பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரும் அப்போது அடிபட்டது..

ஹேம்நாத்
மேலும், முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர், சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்ததாக, அவர் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் தெரியவந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆடம்பர பிரியரான ஹேம்நாத்தோ, விஐபி மகன்கள், விவிஐபி அரசியல்வாதிகளின் மகன்கள் என சிலருடன் தொடர்பு வைத்து கொண்டு, பார்ட்டி, பப்பு என்று சுற்றி வந்ததாகவும், பிரபலங்களின் மகன்களுடன் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டு, பெரிய இடத்து பழக்கம் தனக்கு இருப்பதாக தனக்கு தெரிந்தவர்களிடம் காட்டிக் கொள்வாராம்.

லைம்லைட்
பிறகு, அரசு வேலை, டாக்டர் சீட் வாங்கி தருகிறேன் என்று உதார் விட்டு, கோடிக்கணக்கில் மோசடி செய்து, அது தொடர்பாக புகாரும் போலீசில் பதிவாகி இருப்பதாகவும் செய்திகள் அப்போதே வந்தன. இப்படி எத்தனையோ யூகங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென அனைத்தும் அடங்கிவிட்டது.. ஒரு சத்தத்தையும் காணோம்.. பிறகு சித்ரா இறந்து ஒரு வருடம் கழித்து, லைம்லைட்டில் வந்த ஹேம்நாத், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு போலீசில் புகார் மனு தந்துள்ளார்..

பிரபல புள்ளி
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேம்நாத், "இந்த மரணத்தில் மாபியா கும்பலுக்கு தொடர்பு உண்டு.. 4 பேருடன் சித்ரா தொடர்பில் இருந்தார்.. ஒருவர் அரசியல் தலைவர், இன்னொருவர் தொழிலதிபர், இன்னொருவர் போதை பொருள் கும்பலை சேர்ந்தநபர், இன்னொருவர் அரசியல்வாதி மகன் என 4 பேரையும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணை தற்போது எந்த அளவுக்கு உள்ளது என்று தெரியவில்லை..

சித்ரா மரணம்
அதேபோல, ஹேம்நாத்தின் வழக்கறிஞர் சிவ நாகேஷ், வளர்ந்து வரும் நடிகைகளை சின்னத்திரையுலகை சேர்ந்த ஒருவர் மெயின்டெய்ன் செய்து, போதை பழக்கத்தை ஏற்படுத்தி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.. இவரும் அந்த நபர் யார் என்று ஓபனாக சொல்லவில்லை.. அதேசமயம் இது தொடர்பான விசாரணையும் எந்த அளவுக்கு உள்ளது என்று தெரியவில்லை..

உடலுறவு
இதற்குநடுவில், ஹேம்நாத்திற்கு பணம்தான் முக்கியம்.. ஜாலியாக இருக்கணும்.. குடிப்பது, நினைத்த நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது, நினைத்த பெண்களுடன் ஊர் சுற்றுவது என்று அவரை அறிந்தவர்கள் ஏதாவது ஒரு தகவலை கசிய விட்டு கொண்டே இருக்கிறார்கள்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. சித்ரா கடைசியாக சில பெயர்களை சொன்னதாக ஹேம்நாத் சொல்கிறார்.. ஆனால், அவர்கள் பெயரை சொல்லவில்லை.. இதற்கு, அவருக்கு வந்த கொலை மிரட்டல்கள்தான் அல்லது ஹேம்நாத்துக்கும் இதில் தொடர்பு இருப்பதால்தான் வெளியே சொல்லாமல் இருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் சிலர்..

ஹோட்டல்
இப்போது சித்ரா குறித்து மேலும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. அதிலும் சித்ரா மரணத்தன்று நடந்த கடைசி நாளில் நடந்ததாகவே அந்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. நிகழ்ச்சியில் இருந்தபோது சித்ராவுக்கு ஒரு போன் கால் வந்ததாகவும், அப்போது அவர் கோபமாக பேசியதாக சொல்கிறார்கள்.. அன்றைய தினம், ஹோட்டலுக்கு ஒரு மாஜி கார் வந்துபோனதாகவும் சொல்கிறார்கள்.. அதேபோல, அந்த கடைசி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை முடித்து விட்டு ஹோட்டல் ரூமுக்கு திரும்பியபோது அவரது காரில் 4 ஆண்கள் இருந்தார்களாம்..

4 பேர் யார்?
அப்போது சித்ராவின் கார் வேகமாக ரோட்டில் சென்றதாம்.. ஏற்கனவே சித்ராவின் தோழி ரேகா நாயகர், சித்ராவை காரிலேயே வைத்து கொலை செய்து விட்டு, ரூமில் சடலத்தை தொங்கவிட்டதாக கூறியிருந்த நிலையில், காரில் இருந்தவர்கள் யார் என்று தெரியவில்லை.. அதேபோல, 4 பேருக்கு சித்ராவுடன் தொடர்பு இருந்தது என்று ஹேம்நாத் செய்தியாளர்களிடம் கூறியிருந்த நிலையில், அந்த 4 பேர்தான் இவர்களா? என்றும் தெரியவில்லை..

மாஜி கார்
எனவே, சித்ரா கடைசியாக யாரிடம் பேசினார் என்று செல்போனை ஆராய்ந்தாலும், போலீசார் தீவிர விசாரணை நடத்தினாலும், சித்ராவுடன் காரில் சென்றவர்கள் யார்? என்று தெரியவரும்.. அதேபோல, ஹோட்டலுக்கு ஒரு மாஜி கார் வந்துபோனது என்றால், அதையும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்தாலே தெரியவரும் என்கிறார்கள்.. எப்படியோ, நாளுக்கு நாள் ஏதாவது யூகங்களும், சந்தேகங்களும் சோஷியல் மீடியாவில் பரபரத்து வரும் நிலையில், போலீசார் தான் உண்மை தன்மையை கொண்டு வரவேண்டும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர் சித்ராவின் ப்ரியமான ரசிகர்கள்..!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications