வங்கி கணக்கிற்கு வருது அரசின் ரூ.5000.. இன்ப அதிர்ச்சி.. உங்கள் அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்தாச்சா?
சென்னை: மாதந்தோறும் வங்கிக் கணக்கில் சரியாக 5,000 ரூபாய் வந்து விழுந்தால் எப்படி இருக்கும்? மத்திய அரசின் 'அடல் பென்ஷன் யோஜனா' (APY) திட்டம்தான் இப்போது டாக் ஆஃப் தி டவுன்.
ஏப்ரல் மாதத்துக்கான ஓய்வூதியத் தொகை நேற்று முதல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதால், ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டம், தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜனவரி மாதத்திற்கான பென்சன் தொகை லட்சக்கணக்கான ஊழியர்களின் வங்கி கணக்கில் அண்மையில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கூலி வேலை செய்பவர்கள் முதல் அமைப்புசாரா தொழிலாளர்கள் வரை, முதுமைக் காலத்தில் யாருடைய கையும் எதிர்பார்க்காமல் வாழவே இந்தத் திட்டம். இதில் எப்படி இணைவது? என்னென்ன நன்மைகள்? இதோ ஒரு குவிக் கைடு:
அடல் பென்ஷன் யோஜனா - யாருக்கெல்லாம் பொருந்தும்?
18 முதல் 40 வயதுக்குள் இருக்கிறீர்களா? நீங்கள் வருமான வரி கட்டாத ஒரு சேமிப்புக் கணக்குதாரர் என்றால், தாராளமாக இதில் இணையலாம். அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் எதிர்காலத்துக்காகச் சேமிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் மாஸ்டர் பிளான். 60 வயதைத் தொட்டதும் உங்களுக்கு நிம்மதியான பென்ஷன் கேரண்டி! 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, வருமான வரி செலுத்தாத, வங்கிச் சேமிப்பு கணக்கு வைத்துள்ள எவரும் இதில் இணையலாம்.
பலன்கள் என்னென்ன?
உத்தரவாத பென்ஷன்: நீங்கள் செலுத்தும் தொகையைப் பொறுத்து மாதம் 1,000 முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும். 60 வயதுக்குப் பிறகு நீங்கள் இருக்கும் வரை இந்தப் பணம் வந்துகொண்டே இருக்கும்.
குடும்பப் பாதுகாப்பு: சந்தாதாரர் மறைந்தால், அதே தொகை அவரது துணைக்கு (மனைவி/கணவர்) வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
நாமினிக்கு ஜாக்பாட்: தம்பதியர் இருவருமே மறைந்தால், அதுவரை சேர்ந்த மொத்தத் தொகையும் நாமினியிடம் ஒப்படைக்கப்படும்.
அடல் பென்ஷன் யோஜனாவரிச் சலுகை: என்.பி.எஸ் போலவே, இதிலும் 80CCD(1)-ன் கீழ் வரிச் சலுகை பெறலாம்.
இடையில் அசம்பாவிதம் நடந்தால்?
ஒருவேளை 60 வயதுக்கு முன்பே சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரது துணை அத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரலாம். அல்லது, அதுவரை சேர்ந்த தொகையைப் பெற்றுக்கொண்டு திட்டத்திலிருந்து வெளியேறலாம். அதேபோல், உரிய நேரத்தில் தவணை செலுத்தத் தவறினால் பி.எஃப்.ஆர்.டி.ஏ (PFRDA) விதிமுறைப்படி அபராத வட்டி வசூலிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) போன்றே, இதிலும் வருமான வரிச் சட்டம் 80CCD(1)-ன் கீழ் வரி விலக்கு பெற முடியும். சந்தாதாரர்கள் மாதத் தவணையைச் சரியாகச் செலுத்தத் தவறினால், மத்திய அரசு மற்றும் PFRDA நிர்ணயிக்கும் சிறு அபராதத் தொகையைச் செலுத்த வேண்டி வரும்.
புகார் அளிக்கணுமா?
திட்டம் தொடர்பாக ஏதேனும் குளறுபடி இருந்தால் வருந்தத் தேவையில்லை. www.npscra.nsdl.co.in என்ற இணையதளத்தில் 'NPS-Lite' ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துப் புகார் அளிக்கலாம். புகார் அளித்ததும் கிடைக்கும் டோக்கன் எண்ணை வைத்து, உங்கள் கோரிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் ட்ராக் செய்து கொள்ளலாம்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications