Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2000 ரூபாயை விடுங்க.. இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய் நோட்டா? இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் தாளாக 2 ஆயிரம் தான் புழக்கத்தில் இருந்ததாக பலரும் நினைத்து இருக்கலாம். ஆனால் உண்மையில் ரூ.10 ஆயிரம் ரூபாய் தாள்தான் நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர்மதிப்பு கொண்ட பணத்தாளாக இருந்துள்ளது. இது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது.. எப்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த 2016 - ஆம் ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை ஒரே நாள் இரவில் மத்திய அரசு செல்லாது என்று அறிவித்தது. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி முன்பாக உரையாற்றி இந்த பெரும் அறிவிப்பை வெளியிட்டார்.

 Did you know that India once had 10,000 rupee notes, when it was introduced?

மோடி இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் ஒட்டு மொத்த இந்தியாவும் பரபரப்புக்கு உள்ளானது. மக்கள் தங்கள் கைகளில் வைத்து இருந்த உயர் மதிப்பு கொண்ட பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர். வங்கிகளில் மட்டுமே பணத்தை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட பணத்தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பணப்புழக்கத்தை ஈடுகட்ட 2000 ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மக்கள் புழக்கத்தில் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்: அதுவரை ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே உயர் மதிப்பு கொண்டதாக இருந்த சூழலில் மக்கள் கைகளில் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் தவழ தொடங்கின. நீல நிறத்திலான இந்த ரூபாய் நோட்டுக்களையும் தற்போது திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துவிட்டது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்திய போது இந்தியாவில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் தாள் இதுதான் என பலரும் எண்ணியதுண்டு.

ஆனால், உண்மை அதுவல்ல.. இந்தியாவில் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த அதிக மதிப்பு கொண்ட ரூபாய் தாள் எதுவென்றால் அது பத்தாயிரம் ரூபாய் தான்... என்னங்க சொல்றீங்க.. என பலரும் புருவத்தை உயர்த்தி பார்ப்பது தெரிகிறது. ஆமாங்க... இதுதான் உண்மை.. அது மட்டும் இல்லை இந்தியாவில் 5 ஆயிரம் ரூபாய் தாளும் புழக்கத்தில் இருந்ததாம்.

எப்போது செல்லாது என அறிவிக்கப்பட்டது?: ரூ10 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் முதன் முதலில் புழக்கத்தில் இருந்தது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலத்தில். அதாவது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரிசர்வ் வங்கி 1938 ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாய் நோட்டை அச்சடித்தது. பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பார்த்த ரூபாயாக இது இருந்தது அன்றைய கால கட்டத்தில்.. ஏனெனில் அப்போதெல்லாம் சாதாரண மக்கள் நூறு ரூபாய் பார்ப்பதே பெரும் அதிசயம் தான்..

அந்த நிலை இருந்த சமயத்தில் 10 ஆயிரம் ரூபாய் தாள்கள் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டது. பிறகு 8 ஆண்டுகளில் இந்த பணம் மதிப்பிழப்பு செய்யபட்டது. அதாவது 1946 ஆம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாய் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு 1954 ஆம் ஆண்டு இந்த பத்தாயிரம் ரூபாய் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு இறுதியாக 1978 ஆம் ஆண்டு மதிப்பிழப்பு செய்யப்பட்டது. அதற்கு பிறகு இந்த ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

ரகுராம் ராஜன் வைத்த பரிந்துரை: கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பணவீக்கம் மிக அதிகமாக இருந்து. அதாவது சில்லரை பணவீக்கம் 10.17 ஆக இருந்த அந்த கால கட்டத்தில் அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், நாட்டில் மீண்டும் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் தாள்களை அறிமுகம் செய்வது குறித்த பரிந்துரையை வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும் இதை அப்போதைய மன்மோகன்சிங் அரசு ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதேபோல, கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தலாம் என்ற பரிந்துரையை அரசு நிராகரித்ததாக கூறியிருந்தார்.

 Did you know that India once had 10,000 rupee notes, when it was introduced?

தற்போது 10 ஆயிரம் ரூபாய் தாள் இருந்தால்?: எது எப்படியோ நாட்டில் அதிக மதிப்பு கொண்ட தாளாக 2 ஆயிரம் தான் இருந்தது என பலரும் நினைத்திருப்போம். ஆனால், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தான் இந்தியாவில் உயர் மதிப்பு கொண்ட தாளாக இருந்துள்ளது. 10 ஆயிரம் தற்போது இருந்தால் வெறும் 10 தாளில் 1 லட்சத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டுவிடலாமே என நினைப்பது தெரிகிறது... அது சரிதான்..

அதேவேளையில், பறிகொடுத்தாலும் தொலைத்தாலும் ஒரு சிங்கிள் தாளில் பத்தாயிரத்தை இழக்க நேரிடும். எனவே.. கூட்டி கழித்து பாருங்கள்.. பொருளாதார நிபுணராக இன்றி சாதாரண மக்களாக இருந்து பார்த்தால் பத்தாயிரம் ரூபாய் தாளில் நன்மைக்கு சமமாக தீமையும் இருக்கத்தான் செய்கிறது. அதெல்லாம் இருக்கட்டும்.. இந்த இரண்டாயிரம் ரூபாய் தாளை கையில் வைத்து இருந்தால் உடனே மாற்றிடுங்க... இன்னும் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைதான் டைம் இருக்கு..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+