அண்ணாமலையின் அரசியலுக்கு விதைபோட்டதே விஜயகாந்த் தான் தெரியுமா? 2009 லோக்சபா தேர்தலில் என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தான் அண்ணாமலைக்கு அரசியலில் விதைப்போட்டதே விஜயகாந்த் தான் எனவும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது? என்பது பற்றிய விபரம் வருமாறு:

நடிகராக இருந்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். திறமை மட்டும் இருந்தால் போதும் திரைத்துறையில் உச்சத்துக்கு செல்லலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார்.

Did you know that Vijayakanth planted the seeds of Annamalais politics? What happened in 2009 Lok Sabha election?

எம்எல்ஏவாகி தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வரை அவர் உயர்ந்தார். தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருக்கும்போதே தேமுதிகவை தொடங்கி துணிச்சலாக செயல்பட்டவர் தான் இந்த விஜயகாந்த்.

இந்நிலையில் தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்நிலையில் தான் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4.45 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே தான் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல பாஜக தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அதோடு இன்று மாலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு அவர் ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் தான் தற்போது பாஜகவின் தமிழக தலைவராக அண்ணாமலைக்கு அரசியலில் வழிக்காட்டியாக விஜயகாந்த் இருந்துள்ளார். அதாவது அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். அதன்பிறகு விருப்ப ஓய்வு கொடுத்து பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகும் முன்பே விஜயகாந்த்திடம் இன்டன்ஷிப் செய்துள்ளார்.

அதாவது கடந்த 2009 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயம் அது. அண்ணாமலை அப்போது ஐஐஎம்-ல் எம்பிஏ படிப்பை படித்து வந்தார். இந்த சமயத்தில் தான் அண்ணாமலை 3 மாதம் விஜயகாந்திடம் இன்டன்ஷிப் செய்துள்ளார். இதுபற்றி பல பேட்டிகளில் அண்ணாமலையே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று காலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்துக்கும், தனக்குமான உறவு குறித்து அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

இதுபற்றி அண்ணாமலை கூறுகையில் ‛‛கேப்டன் விஜயகாந்தின் இழப்பு பெரும் இழப்பாகும். சினிமா, அரசியல், பொதுவாழ்வு என அனைத்திலும் புதிய பாதையில் பயணித்தவர். நிறத்தில் இருந்து அனைத்தையும் உடைத்து சாதித்தவர். ரிஸ்க் எடுத்து வாழ்ந்து சாதித்தவர். ஏழை மக்கள் நலனுக்காகவும், அவர்களின் பசியை போக்கவும் அவரது கொடுகையை நாம் அனைவரும் கேட்டுள்ளோம். நான் அவருடன் 2009 நாடாளுமன்ற தேர்தலின்போது ஐஐஎம்-ல் எம்பிஏ படித்தேன். அப்போது 3 மாதம் விஜயகாந்திடம் இன்டன்ஷிப் செய்தேன். அவரது சிந்தனைகள், செயல்பாடு உள்ளிட்டவற்றை ருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக மிக வித்தியாசமான மனிதர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+