விஜயகாந்த் நினைவிடத்தில்! உதயநிதி ஸ்டாலினிடம் சைகையிலேயே பிரேமலதா சொன்ன விஷயத்தை கவனித்தீர்களா?
சென்னை: விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் சைகையிலேயே பிரேமலதா ஒரு விஷயத்தை சொன்னாரே அதை கவனித்தீர்களா?
தேமுதிகவின் முன்னாள் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், கடந்த 2023 டிசம்பர் 28 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது நினைவு நாளை தேமுதிக கட்சி 'குருபூஜையாக' அனுசரித்து வருகிறது. இதனை முன்னிட்டு, கட்சித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தமிழக தேர்தல் ஆணையம் முத் கேப்டன் ஆலயம் வரை அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தினார். தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், அவர், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டவர், இப்போதைய முதலமைச்சரின் அன்புக்குரிய நண்பர், எனது பாசத்திற்குரிய சகோதரர் கேப்டன் விஜயகாந்த். தனது அன்பால் அனைவரையும் கவர்ந்து, வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் மக்கள் மனதிலும் நாயகனாக வாழ்ந்து, மறைந்தாலும் எங்கள் உணர்வில் என்றும் வாழும் அவரது புகழ் நிலைத்திருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், "'வானத்தைப் போல மனம் படைத்து', 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற கொள்கையோடு வாழ்ந்த, பத்ம பூஷன் அன்பு சகோதரர் விஜயகாந்த், கலைத் துறையிலும், மக்கள் பணி வாழ்விலும் பல சாதனைகளைப் படைத்தார்" என்று பாராட்டிப் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், "ஏழை மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டு, எல்லோருக்கும் உதவும் தன் உயர்ந்த மனதால் தமிழ் மக்களின் அளவற்ற அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் விஜயகாந்த்தின் நல்ல பணிகளை நினைவுகூர்கிறேன்" என்று தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான திரைப் பிரபலங்களும் அங்கு வந்து மரியாதை செலுத்திய நிலையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பிரேமலதாவிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கு தனது மகனை விட்டு பதில் சொல்ல வைத்த பிரேமலதா, தான் மவுன விரதம், இன்று பேச மாட்டேன் என சைகை மூலம் உதயநிதியிடம் சொன்னார். அதற்கு உதயநிதியும், அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை என கூறினார். கடந்த இரு ஆண்டுகளாக கேப்டன் நினைவிடத்திற்கு வரும் பிரேமலதா எதையும் சாப்பிடாமல் மவுனவிரதம் இருந்து வருகிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications