குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000.. விண்ணப்ப படிவத்தில் உள்ள அந்த வார்த்தை.. சரியில்லையே.. ஷாக்கிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தின் நகல் நேற்று அரசு மூலம் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள வார்த்தை ஒன்று கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருந்தது. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது.

Did you notice this thing in the 1000 RS Housewives Scheme application form?

இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட தொடங்கி உள்ளன. ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன. அதேபோல் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தியும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முகாம்கள் வழியாக பெண்களை வழி நடத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற உள்ளனர்.

இந்த நிலையில்தான் இந்த விண்ணப்ப படிவத்தின் நகல் நேற்று அரசு மூலம் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள வார்த்தை ஒன்று கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் படிவத்தில் முதலமைச்சரின் படம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் படிவத்தில் உள்ள விதவை என்னும் வார்த்தை சர்ச்சையாகி உள்ளது.

கைம்பெண் என்ற வார்த்தையை விதவைக்கு பதிலாக பயன்படுத்த முனைந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால் அவரின் பெயர் கொண்ட திட்டத்தில் விதவை என்ற வார்த்தை இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இந்த பெயரை கைம்பெண் என மாற்றுவது கலைஞருக்குப் பெருமை சேர்க்கும் என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கும்?:
குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண்
ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்
குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும்
ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காது?:
குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்
ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள்
சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+