சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சக்கட்ட வெறுப்பிற்கே போய்விட்ட ராமதாஸ்.. "விதியே விதியே" என்று நொந்து போய் ட்வீட் பதிவு

டாக்டர் ராமதாஸ் விரக்தியுடன் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: உச்சக்கட்ட வெறுப்பிற்கே டாக்டர் ராமதாஸ் சென்றுவிட்டார்.. "விதியே விதியே என்செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரை யாயோ?" என்று ராமதாஸ் ஐயா நொந்து போய் ஒரு ட்விட் போட்டுள்ளார்.

இப்போது, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையை கையில் எடுத்து உள்ளார் ராமதாஸ்.. இந்நேரம் கூட்டணி பேசி முடிவாகி, தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றிருக்க வேண்டிய நிலையில், பாமக பிடிவாதத்துடன் உட்கார்ந்துள்ளது.

Did you think that fate is fate, Dr Ramadoss frustration Tweet

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி இதுவரை பாமக 6 கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறது. ஆனால், அதிமுக ஒப்புக் கொள்ளவில்லை.

போராட்டங்களுக்கு இடையில் அதிமுக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறது. இதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்று தெரிகிறது.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அமைச்சர்கள் குழுவுடன், பாமக இட ஒதுக்கீட போராட்ட குழு சென்னை பசுமை வழி சாலையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு தரப்பிலும் அமைதியே நிலவியது..

பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அதிமுகவும் பாமகவும் அறிவிக்காமல் இருந்த நிலையில், இன்றைக்கு பாமக நிறுவர் ராமதாஸ் ஒரு ட்வீட்டினை பதிவிட்டிருக்கிறார். "விதியே விதியே என்செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரை யாயோ?" என்று டாக்டர் ராமதாஸ் நொந்து போய் ஒரு ட்விட் போட்டுள்ளார்.

பேச்சுவாத்தையில் கிட்டத்தட்ட சுமுகம் ஏற்பட்டு நேற்று ராமதாஸ் முதல்வரை சந்திக்கிறார் என்று தகவல் வந்தது... ஆனால் இந்த சந்திப்பு நிகழவில்லை... அதனால்தான் இன்றைக்கு இப்படி ஒரு இந்த விரக்தியினை வெளிப்படுத்தி இருக்கிறார் போலும் ராமதாஸ்..!

English summary
Did you think that fate is fate, Dr Ramadoss frustration Tweet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X