சென்னையில் ஐபிஎல் போட்டி டிக்கெட் புக்கிங் செய்யனுமா.. இதை தெரிஞ்சுகிட்டு போங்க.. குட்நியூஸ்
சென்னை: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 30ம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இடையேயான போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. ஒரு நபருக்கு இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படாது என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஐபிஎல் தொடரில் வேறலெவலில் விளையாடி வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. குஜராத் அணியும் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இதற்கு அடுத்ததாக ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 30-ந்தேதி (மாலை 3.30 மணி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.
குறைந்தபட்ச விலையான ரூ.1,500-க்குரிய டிக்கெட்டுகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் விற்கப்பட உள்ளது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளும் கவுண்ட்டரில் நாளை(வியாழக்கிழமை) தரப்பட உள்ளது.
மேலும் ரூ.3,000 மற்றும் ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் கிடைக்கும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் கூறியுள்ளது.
அதிகாலை முதலே காத்திருந்து டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாந்து வரும் நிலையில் , டிக்கெட்டுகள் புக்கிங்கிற்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதேபோல் எவ்வளவு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரி வருகிறார்கள். இதுபற்றி சிஎஸ்கே நிர்வாகம் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டால் தான் கால்கடுக்க காத்திருந்து ஏமாறுவது குறையும் என்கிறார்கள் ரசிகர்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த கடைசி 10 போட்டிகளில் தலா இரு அணிகளுமே ஐந்து ஆட்டங்களில் வென்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டியில் சிஎஸ்கே தோற்றுப்போய் இருந்தது. இந்த தோல்விக்கு மே 30ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் சிஎஸ்கே பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் வெகுவாக நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications