சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கங்கை அமரனை விடுங்க.. அந்த கையெழுத்து இளையராஜாவுடையதே இல்லை.. அடித்து சொல்லும் விசிக: Exclusive

இளையராஜாவுக்கு விசிக தொடர்ந்து ஆதரவு தந்து, பாஜகவை விமர்சித்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கங்கை அமரன் மீது திமுகவினர் கடுங்கோவத்தில் உள்ள நிலையில், "அந்த புத்தகத்தின் முன்னுரையை இளையராஜா எழுதியிருக்க வாய்ப்பே இல்லை" என்று விசிக அடித்து சொல்கிறது..

இளையராஜா கூறியிருந்த கருத்துக்களின் சர்ச்சைகள் இன்னும் அடங்கவில்லை.. ஒரு புத்தகத்துக்கு எழுதப்பட்டதாக கூறப்பட்ட முன்னுரையின் தாக்கம் தொடர்ந்து வட்டமடித்து வருகிறது.

இந்த விவகாரம் வெடிக்க தொடங்கிய உடனேயே, தன்னுடைய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று தன்னுடைய சகோதரர் கங்கை அமரனிடம் தெரிவித்து இருக்கிறார் இளையராஜா..

நீ என்ன பண்ணுவ சொல்லுயா? வார்த்தையை விட்ட கங்கை அமரன்.. நீ என்ன பண்ணுவ சொல்லுயா? வார்த்தையை விட்ட கங்கை அமரன்..

 கங்கை அமரன்

கங்கை அமரன்

இதனிடையே கங்கை அமரன் அளித்த காரசார பதில்கள், சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது. "அம்பேத்கரை திருமாவளவனுடன் ஒப்பிட்டு பேசுகிறீங்க.. மோடியுடன் ஏன் ஒப்பிட்டு பேசக் கூடாது? அன்னைக்கு ஒரு நிகழ்ச்சியில சொல்றாங்க..அம்பேத்காரின் விருதை அம்பேத்கரே வாங்கி அம்பேத்காருக்கு கொடுக்குறாருனு ஸ்டாலினுக்கு கொடுத்தீங்க.. அதுலாம் ஓகேவா உங்களுக்கு... ஏய்.. ஏய்.. ஏய் பதில சொல்றா அம்பேத்கர் விருதை இன்னொரு அம்பேத்கருனு சொல்ற திருமாவளவன் கையால ஸ்டாலினுக்கு கொடுத்தீங்களே அது ஓகேவா உனக்கு..' என்று கங்கை அமரன் ஆவேசமாக பேசியிருந்தார்.

 கங்கை அமரன்

கங்கை அமரன்

கங்கை அமரன் கேட்ட கேள்விதான் திமுகவினரையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதுகுறித்து நாம் திமுகவினர் சிலரிடம் பேசியபோது அவர்கள் சொன்னதாவது: "விருது கொடுப்பதும், ஒருவருடன், மாபெரும் தலைவரான அம்பேத்கரை ஒப்பிட்டு பேசுவதும் ஒன்றாகிவிடுமா? ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கங்கை அமரனுக்கு தெரியவில்லை.. ஒரு மூத்த கலைஞர் தன்னுடைய பெயரை இந்தளவிற்கு கெடுத்து கொள்ளலாமா?

பாஜக

பாஜக

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், தேவையில்லாமல் முதல்வரை சீண்டும் வேலையில் ஈடுபடுகிறார்.. அம்பேத்கர் விருது என்பது வருடாவருடம் தலைவர்களுக்கு தந்து வருவதுதானே, அதை ஏன் இவர் மட்டுப்படுத்தி பேசுகிறார்? என்று காட்டமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். மற்றொருபக்கம் விசிக இளையராஜா மீதான நன்மதிப்பை குறைத்து கொள்ளாமல், அதேசமயம், பாஜகவை சரமாரி விமர்சித்து கொண்டிருக்கிறது..

 திருமாவளவன்

திருமாவளவன்

"இளையராஜா பாவம், இது ஆர்எஸ்எஸ் செய்யும் சதி" என்று ஏற்கனவே திருமாவளவன் சொல்லி வருகிறார்.. மேலும் பாவலரின் சகோ'க்கள்.. பரிவார்களின் பலிஆடுகளா? என்றும் கேட்டுள்ளார்.. இந்த கருத்து குறித்து நாம் விசிகவின் மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலனிடம் பேசினோம்.. இளையராஜா பாவமா? அம்பேத்கருக்கு நிகரானவரா மோடி? அமித்ஷாவுக்கு சவாவ் விடுகிறாரா திருமாவளவன்? இது சரியா? என்று கேட்டோம்.

 விசிக பாவலன்

விசிக பாவலன்

பாவலன் நம்மிடையே சொன்னதாவது: "இந்துத்துவம் என்பது திமிங்கலத்தை போன்றது.. எல்லாவற்றையும் விழுங்க கூடியது.. விழுங்க முயற்சிக்க கூடியது.. இந்துத்துவத்தின் உச்சந்தலையில் இடியாய் இறங்கியவர்தான் அம்பேத்கர்.. அதனால்தான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னார்..

கட்டமைப்பு

கட்டமைப்பு

கிட்டத்தட்ட ஒரே நாளில் 10 லட்சம் மக்களை, அந்த அடையாளத்தில் இருந்து பிடுங்கி எடுத்து பவுத்த மதத்துக்கு மாற்றினார்.. அவர் ஒரு இந்துத்துவத்துக்கு ஆதரவானர் என்ற கட்டமைப்பை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கட்டமைத்து வருகிறார்கள்.. மற்ற மாநிலங்களில் அது வெற்றி பெற்றது.. ஆனால், கர்நாடகம், தென் தமிழகம் தவிர மற்ற இடங்களில் வெற்றி பெறவில்லை.. தமிழ்நாட்டில் ஒரு கட்சியை வளர்க்க சிறந்த ஆளுமை தேவை.. ஆளுமை மிக்க ஆட்களை தனக்கான ஆட்களாக மாற்ற வேண்டும்..

திருமாவளவன்

திருமாவளவன்

பிறப்பால் ஒன்றாக இருக்கலாம்.. ஆனால், இளையராஜாவும் அம்பேத்கரும் சிந்தனையில் வேறுபட்டவர்கள்.. இந்துத்துவத்தை ஆதரிக்க கூடியவர் இளையராஜா.. சிறந்த ஆன்மீகவாதி.. ஆனால், இளையராஜா எழுதி தந்ததாக சொல்லப்படும் அந்த அணிந்துரையின் சொல்லாடலை படித்து பார்க்கும்போது, அது அவரால் எழுதப்பட்டதே கிடையாது.. ஏன் என்றால், இளையராஜாவே ஒரு பேட்டியில் சொல்கிறார், எனக்கு இசைதான் உயிர். எனக்கும் அரசியலுக்கும் தொடர்பே கிடையாது என்று.

 இளையராஜா

இளையராஜா

அப்படி இருக்கும், அந்த அணிந்துரையில் உள்ள சொல்லாடல் இளையராஜாவின் சிந்தனையில் உதிர்த்தது அல்ல.. முழுக்க முழுக்க எழுதி கொடுத்துள்ளனர்.. ஒரு நாட்டின் பிரதமர் மோடி.. அவரை பற்றி கேட்கும்போது, இவரால் மறுக்க முடியாது.. வேண்டுமானால் எழுதி கொடுங்க, கையெழுத்து போடறேன் என்று சொல்லி இருக்கலாம்.. அதாவது இளையராஜாவை பயன்படுத்தி கொள்கிறார்கள்.. இங்கு பாஜக கட்சியை வளர்ப்பதற்கு அவரை பயன்படுத்துகிறார்கள்.. ஆனால், அவர் உலகிலேயே யாருடனும் ஒப்பிட முடியாத இசையமைப்பாளர் அவர்" என்றார் பாவலன்

English summary
Didnt Ilayaraja write about dr ambedkar and What does vck thirumavalavam, pavalan say இளையராஜாவுக்கு விசிக தொடர்ந்து ஆதரவு தந்து, பாஜகவை விமர்சித்து வருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X