'மது பிரியர்களை' இனி ஏமாற்ற முடியாது.. டாஸ்மாக் கடையில் வந்த அதிரடி மாற்றம்.. என்னன்னு பாருங்க
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடுவதை கட்டுப்படுத்த , புதிய வசதியை டாஸ்மாக் நிர்வாகம் கடைகளில் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக 200 கடைகளில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை விற்பனை செய்ய 238 எலைட் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மதுபானங்களை எம்.ஆர்.பி விலைக்கு மேல், அதாவது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்கக் கூடாது என்பதுதான் அரசின் உத்தரவு ஆகும். கூடுதல் விலைக்கு விற்றால், டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மது பாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை கொடுத்தே வாங்குவதாக மது பிரியர்கள் பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. பாட்டிலுக்கு ரூ 5, அல்லது 10 என கூடுதல் விலை வைத்தே விற்பனை செய்வதாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் மது பிரியர்கள் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், டாஸ்மாக் கடைகளிலும் வாக்குவாதம் செய்வதைக் காண முடிகிறது.
சில கடைகளில் டாஸ்மாக் ஊழியர்களே, அடாவடியாக பேசுவது போன்ற காட்சிகளும் சமூக வலைத்தளங்களிலும் அவ்வபோது வெளியாகி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என அரசு கண்டிப்பான உத்தரவு போட்டாலும் கூட, இது தொடர்பான புகார்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை எவ்வளவு என்பது குறித்த பட்டியல் அடங்கிய டிஜிட்டல் போர்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த டிஜிட்டல் போர்டில் எந்தெந்த மதுபானங்கள் என்ன ரேட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் தெளிவாக இடம் பெற்றுள்ளது. அதாவது, அளவு வாரியாக என்ன ரேட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்ற விவரம் டிஜிட்டல் போர்டில் இடம் பெற்றுள்ளது. இதனால், மதுக்கடைகளுக்கு வரும் மது பிரியர்கள்.. டிஜிட்டல் போர்டில் விலை விவரங்களை தெரிந்து கொண்டு வாங்க முடியும்.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. நிர்வாக வசதிக்காக ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டலத்திற்கு 5 சதவீதம் என்ற அடிப்படையில் மொத்தம் 200 கடைகளில் முதல் கட்டமாக இந்த வசதி அமலுக்கு வந்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சி மதுபிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications