மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி.. வீட்டிற்கே வரும் தபால் துறை.. சூப்பர் ஏற்பாடு
சென்னை: மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தபால் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய 'ஜீவன் பிரமான்' திட்டத்தின் மூலம் தபால்காரர்கள் ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அரசு பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்க தபால் துறையின் மூலம் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்படும். இதுதான் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் ஆகும்.

இதனிடையே பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய 'ஜீவன் பிரமான்' திட்டத்தின் மூலம், தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா தபால் வங்கி சார்பில் தபால்காரர்கள் ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர்களின் கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும் முடியும்.
இந்த சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது தபால்காரரை தொடர்பு கொண்டு பயனடையலாம். https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது 'Postinfo' செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம். அனைத்து தபால் அலுவலகங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications