“இந்தியா மேப்பில் தவறு”.. தமிழக அரசின் DIPR வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை.. கொந்தளித்த அண்ணாமலை
சென்னை: ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி நீக்கப்பட்ட இந்தியா வரைபடத்தை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒரு வீடியோவில் பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றதன் நினைவாக கேரள மாநிலம் வைக்கம் நகரில் பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வைக்கம் நகரில் உள்ள பெரியாரின் நினைவகத்தையும், நூலகத்தையும் புதுப்பித்திட ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கி ஆணையிட்டார்.

இதைத்தொடர்ந்து, பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தினை நாளை திறந்து வைக்க கேரளாவிற்கு இன்று பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் & நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பது தொடர்பான காணொளி, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், இந்திய வரைபடம் காட்டப்படுகிறது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்த இந்தியா மேப்பில் ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதி இடம்பெறவில்லை. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற ஊடகப் பிரிவான TN DIPR (தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை), நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது.

நமது நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் எப்போது என்று தெரியாத ஒருவரால் இந்த மாநிலம் வழிநடத்தப்பட்டால், மாநில அரசின் துறைசார்ந்த பணிகளைக் கையாள அவர்களால் அமர்த்தப்பட்ட தகுதியற்ற கைப்பாவைகள் இத்தகைய மெத்தனப் போக்கில் செயல்படுவதில் தான் முடிவடையும்.
இந்தச் செயல் திமுகவின் தேசிய ஒருமைப்பாட்டைப் புறக்கணிக்கும் செயலைப் பிரதிபலிக்கிறது. மேலும் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இதுபோன்று மீண்டும் செய்யத் துணியக்கூடாது என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் எக்ஸ் பதிவில், ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்குச் சொந்தமானது போல இந்திய வரைபடம் சித்தரிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்!












Click it and Unblock the Notifications