திமுக அரசை இப்படி யாருமே பாராட்டி இருக்கவே முடியாது.. அதிரவைத்த கி.வீரமணி
சென்னை: தமிழ்நாட்டில் எதிர்கட்சியே ஆளுங்கட்சி போல செயல்படுவதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பாராட்டினார்.
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:
பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அதிமுக உதவியுடன் பாஜக பெற்ற 4 இடங்களையும் இல்லாமல் செய்து விடும்.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்காத திமுக அரசை கலைக்க வேண்டும் என்று கூறியிருக்கும் நிலையில், முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம் என்று கூறிய ஒன்றிய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பின்னர் தமிழ்நாடு வரட்டும்.

ஆளும் கட்சி
அப்படி தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் நடைபெற்றால், எதிர்கட்சியே ஆளுங்கட்சியாக செயல்படும் நிலையில், எதிர்கட்சி இல்லாமல் மீண்டும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார்.
நீட் தேர்வு விவகாரத்தில் கல்வி ஒத்திசைவு பட்டியலில் உள்ளதால், தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசே இறுதி முடிவை எடுக்கலாம். நீட் போராட்டத்தில் இறுதியில் முத்துவேல் கருணாநிதி வெற்றி பெறுவார் .

விற்பனை
அனைத்து அரசும் உருவாக்க தனியாக அமைச்சகம் உருவாக்கும் நிலையில், பாஜக அரசில் தான் விற்பதற்கு, அடமானம் வைப்பதற்கு தனியாக அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மறைமுக நோக்கம் இடஒதுக்கீட்டை ஒழித்து சமூக நீதியை அழிப்பதே ஆகும். அதனால் அகில இந்திய அளவில் தனியார் துறையில் இடஒதுக்கீடை கொண்டு வர வேண்டும் என்ற முன்னெடுப்பை திராவிடர் கழகம் முன்னெடுக்கும். பெரியார் உலகம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம், வ.உ.சி. பெயரில் விருது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது இவ்வாறு கி. வீரமணி தெரிவித்தார்

தீர்மானங்கள் நிறைவேற்றம்
முன்னதாக செயற்குழுவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவற்றில் முக்கிய தீர்மானங்களின் விவரங்கள், பெரியாரின் 143வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 17ஆம் தேதி ' திராவிடத் திருவிழாவாக' நடத்த திட்டம். பெரியார் பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டு 'திராவிடத் திருவிழா' இணைவழி கருத்தரங்குகளாக நடைபெறும்.

திமுக அரசு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய திமுக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய திமுக ஆட்சிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மருத்துவ படிப்பு
மருத்துவ முதுநிலை, உயர்சிறப்பு மேற்படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு நீட் தேர்வுக்கு முன்னதாக வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு மீண்டுன் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து அல்லது விலக்கு பெற வேண்டும் என மொத்தமாக 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications