விடக்கூடாது.. "அவர்" ஹெலிகாப்டர் வெச்சிருக்காராமே.. ஆனாலும்?.. கி.வீரமணி வைத்த முக்கிய கோரிக்கை
வெள்ளை அறிக்கை குறித்து கி வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்
சென்னை: வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு அனைத்தும் தானே பொறுப்பேற்பதாக நிதியமைச்சர் சொல்லி உள்ளது இந்தியாவிலேயே வேறு எங்குமே நடக்காத நிகழ்வு.. புதுமை.. அமைதி புரட்சி என்று மூத்த தலைவர் கி. வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தஞ்சாவூர் வந்தபோது, செய்தியாளர்களை சந்தித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:
"3வது அலை வருவதாக சொல்கிறார்கள்.. ஆனால் கிராமப்புறங்களில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மாஸ்க் அணியாமல் இன்னமும் உள்ளனர்... அதனால், இதனை மக்கள் இயக்கமாக மாற்றி கொரோனாவை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்... மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே 3வது அலையை தடுக்க முடியும்.

அறிக்கை
இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்... அடுத்து வரக்கூடிய பட்ஜெட்டுக்கு இது ஒரு முன்னோடியாக அமையும்... தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள அரசு ஒரு வெளிப்படை தன்மையோடு செயல்படுகிறது.

நிதியமைச்சர்
குறிப்பாக அந்த வெள்ளை அறிக்கையில், முடிவுரை பகுதி தெளிவாக உள்ளது.... மற்ற அறிக்கைகளை விட இந்த அறிக்கையில் நிதியமைச்சரே கையெழுத்திட்டு தந்துள்ளார்... அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு அனைத்தும் தானே பொறுப்பேற்பதாகவும் சொல்லி உள்ளது இந்தியாவிலேயே வேறு எங்குமே நடக்காத நிகழ்வு.. புதுமை.. அமைதி புரட்சி.

இந்தியா
கடந்த 7 வருட காலங்களில் நடந்த தவறுகள், போதாமைகள், சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் செய்யப்பட்ட செலவுகள் போன்றவை இனி எக்காலத்திலும் திரும்பி வரக்கூடாது என இந்தியாவுக்கே வழிகாட்ட கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது... வரும் 5 வருட காலத்தில் இதை நாங்கள் ஒழுங்குபடுத்துவோம் என்றும் நிதியமைச்சரே சொல்லி உள்ளார்.

வேளாண்
இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் தமிழகத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட், இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை தருவது மட்டுமல்ல, ஒரு புதுமையை புகுத்தி, மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....

மாஜி அமைச்சர்
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனையிடுவது என்பது பழிவாங்கும் செயல் கிடையாது.. அவை அனைத்துமே ஆதாரங்களோடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது... அதேமாதிரி ஒரு மாஜி அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன... ஊழலில் ஈடுபட்ட எந்த அமைச்சராக இருந்தாலும், சோதனையிடுவதுடன் போதாது, அதற்காக ஸ்பெஷல் கோர்ட்டுகள் அமைத்து, விசாரணை நடத்தி,உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும் அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்க வேண்டும். ஜெயில் தண்டனையே கிடைத்தாலும் சரி, அந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்...

பாஜக
பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை இன்னும் போலீஸ் அதிகாரியாகவே இருக்கிறார்... ஒரு பொறுப்பான கட்சியின் தலைவராக இன்னும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.. அது அவரது பேச்சுக்களிலிருந்து தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள முடிகிறது" என்றார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications