ஜனநாயகன் லீக்கில் அந்த 4 பேரை விடுங்கள்! எடிட்டர்தான் குற்றவாளி! ஆதாரத்துடன் அமீர் பொளேர்
சென்னை: "ஜனநாயகன்" படத்தை பார்ப்பவரை விட முதலில் வெளியே விட்டவன்தான் குற்றவாளி என இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயகன் படம் HD பிரிண்டுடன் வெளியானதை திரைத்துறையினர் கண்டித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அவர் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: படத்தை பார்ப்பவரை விட முதலில் வெளியே பகிர்ந்தவன்தான் குற்றவாளி. ஒரு வேளை சென்சார் போர்டில் இருந்து பகிரப்பட்டிருந்தால் Censor_Copy என்ற வாட்டர்மார்க் இருந்திருக்கும்.

ஆனால் லீக் செய்யப்பட்ட வீடியோவில் EDIT_REF என இருந்தது. அப்படி என்றால் படத்தின் எடிட்டர்தான் குற்றவாளி என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் எச்டி (HD) தரத்தில் கசிந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டியிருந்தது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த படத்தை தணிக்கை மறு ஆய்வு குழுவை சேர்ந்த 4 அதிகாரிகள் பார்த்தனர். இந்த நிலையில் அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகள் வெளியான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த படமுமே இணையத்தில் லீக்கானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரூ 500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட படம் ரீலீஸாகாததால் நஷ்டம் அடைந்துள்ள நிலையில் தற்போது படமே இணையத்தில் லீக்கானதால் தயாரிப்பு குழு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திரையுலகினர் கண்டனம்: ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பைச் சிதைக்கும் இச்செயல் மன்னிக்க முடியாதது" என அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் புகார்: படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்சன்ஸ், தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் முறைப்படி புகார் அளித்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 21 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்சார் போர்டு விளக்கம்: படம் இன்னும் சென்சார் சான்றிதழ் பெறாத நிலையில், சென்சார் போர்டு மூலமாகத்தான் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், "எங்கள் தரப்பிலிருந்து கசியவில்லை, எங்களிடம் பாதுகாப்பான நடைமுறைகள் உள்ளன" என சென்சார் வாரியம் (CBFC) விளக்கமளித்துள்ளது.
ரிலீஸ் தாமதம்: இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல் காரணங்களால் இதன் வெளியீடு காலவரையறையின்றி தள்ளிப்போனது.
திட்டமிட்ட சதியா? தேர்தல் நேரத்தில் விஜய்யின் அரசியல் வருகையைத் தடுப்பதற்காகவே திட்டமிட்டு இப்படம் முடக்கப்படுவதாகவும், தற்போது இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கோரிக்கை: கசிந்த வீடியோக்களை நீக்கவும், சம்பந்தப்பட்ட இணையதளங்களை முடக்கவும் தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. ரசிகர்கள் கசிந்த வீடியோக்களைப் பார்க்க வேண்டாம் எனவும், திரையரங்க வெளியீட்டிற்காகக் காத்திருக்குமாறும் கேட்டுக் ள்ளப்பட்டுள்ளனர்.
சுமார் 400-500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான ஒரு பிரம்மாண்ட படம் இவ்வாறு கசிந்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications