ரம்ஜான் முடியட்டும்.. ஆஜராகிறேன்.. டெல்லி போதை தடுப்பு பிரிவுக்கு இயக்குநர் அமீர் கடிதம்
சென்னை: போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இயக்குநர் அமீர் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள்கள் பிடிபட்ட நிலையில் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இயக்குநர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேர் டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் அமீர், போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பில் இருக்கிறேன். பண்டிகை முடிந்தவுடன் ஆஜராக அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவரை போல் அப்துல் பாசித்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள். இதனிடையே அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க நிதியுதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை நேற்றைய தினம் தமிழக போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிகிறது.
இதையடுத்து தமிழக அதிகாரிகளின் தகவலை அடுத்து டெல்லி என்சிபி (போதை பொருள் தடுப்பு அதிகாரிகள்) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். அவரை விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அது போல் அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 4500 கிலோ போதை பொருள்களை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லி, சென்னையில் போதை பொருள் கடத்தலில் ஜாபர் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தாலும் ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வார் என அஞ்சப்பட்டது. ஆனால் அவரை அப்படி எங்கும் தப்பவிடாமல் ஜெயப்பூரில் வைத்தே டெல்லி என்சிபி அதிகாரிகள் தமிழக போலீஸாரின் உதவியுடன் கைது செய்தனர்.
போதை பொருள் மூலம் கிடைத்த பணத்தில் படங்களை எடுத்ததாகவும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ததாகவும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications