இளையராஜாவை விமர்சிப்பவர்கள் அம்பேத்கரை பொதுத் தலைவராக ஏற்பார்களா?.. இயக்குநர் கேள்வி
சென்னை: இளையராஜாவை விமர்சிப்பவர்கள் அம்பேத்கரை பொதுத் தலைவராக ஏற்பார்களா என பிரபல இயக்குநர் லெனின் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கரும் மோடியும் என்ற தலைப்பில் ப்ளூகிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் வெளியிட்ட புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கண்டால் அம்பேத்கரே பெருமைபடுவார் என இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளன. இதனிடையே இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். யுவன்சங்கர் ராஜாவின் பதிவு தற்போது சமூகவலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

இளையராஜாவின் கருத்து
இளையராஜாவின் கருத்துக்கு பாஜகவினர் ஆதரவாகவும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குநர் லெனின் பாரதி, இளையராஜா விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பிறவிப்பயன்
அவர் கூறுகையில் பிறவிப்பயன், ஊழ்வினைப் பயன், குரு கிருபை என்றிருக்கும் இளையராஜா அவர்களை அண்ணல் அம்பேத்கர் பற்றிய ஒப்பீடு குறித்து விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் அண்ணல் அம்பேத்கரை அனைத்து மக்களுக்குமான பொதுத் தலைவராக பார்க்கும் பார்வை கொண்டுள்ளனர்..?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இளையராஜா வரிசையில் பாக்யராஜ்
இளையராஜா வரிசையில் இயக்குநர் பாக்யராஜு பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். குறை பிரசவம் என பாக்யராஜ் பயன்படுத்திய வார்த்தை மாற்றுத்திறனாளிகளை கொதிப்படைய செய்துள்ளது.
Recommended Video

இளையராஜா திட்டவட்டம்
இளையராஜா விவகாரம் நாளுக்கு நாள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்சினை பெரிதாகி கொண்டே வந்த போதிலும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த கருத்தை தான் திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் எந்தவித பதவிக்காகவும் நான் அவ்வாறு புகழ்ந்து பேசவில்லை. புத்தகத்தை நன்கு படித்த பிறகுதான் முன்னுரையே எழுதினேன் என விளக்கமளித்திருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications