பேட் கேர்ள்-ஐ பாராட்டிய பா.ரஞ்சித்.. உங்க சாதியில் முதல்ல இதை பண்ணுங்க! வம்புக்கு இழுக்கும் மோகன்.ஜி
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பேட் கேர்ள்’ படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டியிருந்தார். இந்நிலையில், பிராமண பெண்களை பற்றி படம் எடுத்தால் புத்துணர்ச்சியாகத் தான் இருக்கும், உங்கள் சொந்த சாதி பெண்களிடம் இதை முயற்சிக்க வேண்டுமென கூறியுள்ளார் இயக்குனர் மோகன்.ஜி.
அனுராக் காஷ்யாப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் நேற்று நடந்த விழாவில் வெளியிட்டனர்.
நடிகை அஞ்சலி சிவராமனை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இரண்டு நிமிடங்கள் இந்த டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒரு மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்திருக்கின்றனர். பள்ளிக் காலம் தொடங்கி இளமைக் காலம் வரை ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும், படிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை, பெற்றோர்களின் அழுத்தம் என பல்வேறு உணர்ச்சி குவியல்களுக்கு இடையே ஒரு பெண் எப்படி வாழ்கிறாள் என்பது குறித்து இந்த படம் விளக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சிறுவயதில் காதல் காமம் என குழப்பமான மன நிலையில் இருக்கும் பெண் அதனை கட்டுப்படுத்தாமல் சக மாணவ மாணவிகளுடன் வெளிப்படையாக பேசுவதாகவு,ம் நீ ப்ளூ ஃபிலிம் பார்ப்பாயா, மற்றும் செ*** வைத்துக் கொள்ள வேண்டும் என சக மாணவி பேசுவது போல காட்சி அமைப்புகள் இருக்கிறது. ஒருபுறம் பெண் சுதந்திரம் என பேசப் பட்டாலும், மறுபுறம் இந்த டீசர் கடும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்து வெகுவாகப் பாராட்டியிருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,” பேர்ட் கேர்ள்-ஐப் பார்க்க நேர்ந்தது, இது உண்மையிலேயே தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம்! இப்படிப்பட்ட துணிச்சலான கதையை ஆதரித்ததற்காக இயக்குனர் வெற்றிமாறன் மகத்தான பெருமைக்கு உரியவர். இந்தப் படம் பெண்களின் போராட்டங்களையும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் ஒரு தனித்துவமான புதிய அலை சினிமா பாணியின் மூலம் சக்தி வாய்ந்ததாக சித்தரிக்கிறது. வாழ்த்துக்கள் வர்ஷா. அஞ்சலி சிவராமன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டியுள்ளார்.
இதற்கிடையே பிராமண பெண்களை பற்றி படம் எடுத்தால் புத்துணர்ச்சியாகத் தான் இருக்கும், உங்கள் சொந்த சாதி பெண்களிடம் இதை முயற்சிக்க வேண்டுமென கூறியுள்ளார் இயக்குனர் மோகன்.ஜி. இதுதொடர்பாக பா.ரஞ்சித்தின் பதிவை பகிர்ந்துள்ள அவர்,”ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்திற்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். வெற்றிமாறன், அனுராக் காஸ்யப் & கோவிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும். பிராமண தந்தை மற்றும் தாயை பழிவாங்குவது ஒன்றும் புதுமையானது அல்ல பழமையானது. இது போன்ற படங்களை உங்கள் சொந்த சாதிப் பெண்களுடன் முயற்சி செய்து, முதலில் உங்கள் சொந்த குடும்பத்தாரிடம் காட்டவும்” என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications