உன் கால்களை முத்தமிடுகிறேன்! பீத்தோவனைப் போல் மெஸ்ஸியும் ஒரு மகா கலைஞன்! உருகிய இயக்குனர் மிஷ்கின்!
சென்னை : உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வென்றுள்ள நிலையில், வான்காவைப் போல், நெருடாவைப் போல், பீத்தோவனைப் போல் மெஸ்ஸியும் ஒரு மகா கலைஞன். அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன் என இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடர் நிறைவுற்றிருக்கிறது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய நிலையில் அர்ஜென்டினா மெஸ்ஸி தலைமையில் களமிறங்கி கோப்பையை கைப்பற்றியது.
முதல் பாதியில் அர்ஜென்டினாவின் கையே ஓங்கி இருந்த நிலையில் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியான் எம்பாப்பே அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து அசத்திய நிலையில் போட்டி சமன் ஆனது.

உலகக் கோப்பை
கூடுதல் நேரத்திலும் இரு அணிகள் சார்பில் தலா ஒரு கோல் அடிக்கப்பட்ட நிலையில் பெனால்டியால் பிரான்சின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. இருந்தாலும் நேற்றைய ஆட்டத்தில் வேற லெவலில் விளையாடினார் உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரரும் அர்ஜென்டினாவின் கேப்டனுமான மெஸ்ஸி. முதலில் கிடைத்த பெனால்டி ஷூட் அவுட்டை கச்சிதமாகப் பயன்படுத்து அநாயசமாக கோலாக்கி அசத்தியதோடு, அடுத்தும் அவர் அடித்த கோல் அர்ஜென்டினாவை முன்னிலை பெறச் செய்தது.

மெஸ்ஸி
இரண்டாம் பாதியை அர்ஜெண்டினா தனது வசமாக்கிக் கொண்டு இரண்டு கோல் அடித்தாலும், எக்ஸ்ட்ரா டைமில் கோல் அடித்து அசத்தியதோடு, பொனால்டி வாய்ப்பிலும் கோல் அடித்து கோப்பையை வெல்ல தனியொருவனாய் அசத்தினார். 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு கோப்பையை உச்சி முகர்ந்த நிலையில், மெஸ்ஸியை உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இயக்குனர் மிஷ்கின்
இந்நிலையில் அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன் என இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் மெஸ்ஸியை புகழ்ந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்ஸியின் மூலமாகப் புதிதாகப் புரிந்து கொண்டேன். மெஸ்ஸி அர்ஜெண்டினாவுக்கு மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர்.

மகா கலைஞன்
பந்திற்கும் அவரின் காலிற்கும் இடையே பெரும் புவியீர்ப்பு விசை இயங்குகிறது. க்ஷண நேரத்தில் நூறு முடிவுகளை அந்த மனிதரின் அசாத்திய மூளை எடுக்கிறது. மெஸ்ஸியின் ஒவ்வொரு அசைவிலும் இசைப் பிறக்கிறது. ப்ருஸ் லீ, மைக்கேல் ஜாக்சன் போல மெஸ்ஸி நம் மனதுகளில் விளையாடுகிறார். வான்காவைப் போல், நெருடாவைப் போல், பீத்தோவனைப் போல் மெஸ்ஸியும் ஒரு மகா கலைஞன். அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications