சார்பட்டா பரம்பரை படத்திற்காக பாக்ஸிங் கற்று கொண்ட பா ரஞ்சித்.. காரணத்தை விளக்கும் பாக்ஸர் தேவானந்த்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படம் எடுப்பதற்கு முன்னர் பா ரஞ்சித்தும் பாக்ஸிங் கற்றுக் கொண்டார் என பாக்ஸர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை அடுத்து தற்போது பாக்ஸிங் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. 1970 களில் நடந்த பாக்ஸிங் குறித்த கதைதான் இது. அந்த வகையில் தமிழகத்தில் பாக்ஸிங் யாருக்கும் தெரியாதது ஏன், பாக்ஸிங் போட்டிக்கு தடை ஏற்பட்டது எதனால் என்பது குறித்து தகவல்களும் வெளியாகியுள்ளன

இதுகுறித்து இந்தியன் டைகர் பாக்ஸர் பி.ஏ.வி. தேவானந்த் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:
கே: இப்போது நீங்கள் பாக்ஸிங் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிறீர்களா
ப: என்னிடம் பயிற்சி பெற்ற 100 பேருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்துள்ளேன். ரயில்வே, தெற்கு ரயில்வே, போலீஸ் உள்ளிட்ட நிறைய துறைகளில் என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் பணியில் இருக்கிறார்கள். என்னால் முடிந்த சேவையை பாக்ஸிங்கிற்காக நான் நிறைய செய்திருக்கிறேன். சிலர் கையில் நிறைய அதிகாரம் இருந்தும் அவர்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் என்னிடம் எந்த அதிகாரமும் இல்லாவிட்டாலும் நிறைய பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளேன்.
2002- 2011 ஆம் ஆண்டு வரை என்னுடைய பாக்ஸர்கள் யாரையும் போட்டியிட விடாமல் என்னை கரம் வைத்தார்கள் சிலர். பாக்ஸிங் சங்கமே ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. காசு கொடுத்தால் போட்டிக்கு அனுப்புவார்கள். அந்த காலகட்டத்தில் சாம்பியன்களும் இல்லை, மெடல் வாங்கியவர்களும் இல்லை.
இதையடுத்து 2012 ஆம் ஆண்டு எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள். என்னிடம் பயிற்சி பெற்ற ஒரு மாணவனை ஜூனியர் நேஷனலுக்கு அனுப்பினேன். அவர் சில்வர் மெடல் எடுத்தார். எங்களுக்கு சான்ஸ் வழங்காததால் யூனிவர்சிட்டிகளில் நாங்கள் பாக்ஸிங் செய்தோம். அதில் மெடல் எடுத்தவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தேன். பாக்ஸிங்கை அழிக்க வேண்டும் என எண்ணுபவர்களிடம் அந்த பதவி இருந்தால் பாக்ஸிங் வளராது.
பாக்ஸிங்கை உருவாக்க வேண்டும் என நினைப்பவர்கள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். தமிழகத்திலிருந்து ஏன் ஒலிம்பிக் போட்டிக்கு பாக்ஸிங்கில் ஒருவர் கூட செல்லவில்லை என கேட்கிறார்கள். ஒருவருக்கு பயிற்சி கொடுத்தால்தானே ஒலிம்பிக்ஸ் செல்ல முடியும். பாக்ஸர்களை முதலில் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படும் கேம்ப்களுக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் இந்தி கற்றுக் கொள்வார்கள். நண்பர்கள் கிடைப்பார்கள்.
வடஇந்தியாவிற்கு செல்லும் போது மொழி பிரச்சினையால் இவர்களால் மற்ற மொழி பாக்ஸர்களுடன் சேர முடியவில்லை. இது போல் கேம்ப்க்கு அழைக்கப்படும் கடிதங்களை கிழித்து போட்டுவிடுகிறார்கள். எனவே சங்கத்திற்கு நல்ல தலைவர், செயலாளர் தேவை.
கே: நீங்கள் ஒலிம்பிக்கில் போட்டியிட்டுள்ளீர்களா
ப: நான் இரு ஒலிம்பிக் போட்டிகளை மிஸ் செய்துவிட்டேன். எனக்கு காயங்கள் ஏற்பட்டதால் இதை மிஸ் செய்தேன். அதனால்தான் நான் என்னிடம் பயிற்சி பெறும் நபர்களுக்கு சொல்வேன், பாக்ஸிங் கற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பேன். காயம் ஏற்பட்டதால் எனது தொழிலே போச்சு. 1992 மற்றும் 1996 ஆகிய இரு ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. தேசிய சாம்பியன், பெஸ்ட் பாக்ஸர் விருது பெற்றவர் நான், எனினும் நானே ஒலிம்பிக் வேண்டாம் என்றேன். காரணம், நேஷனல் லெவலில் விளையாடினால் என் இஷ்டத்திற்கு நான் கிளவுஸ் போட்டு என் கைகளில் ஏற்பட்ட எலும்பு முறிவை பாதுகாக்க முடியும். ஆனால் வெளிநாடுகளில் வெறும் பஞ்சு போல் கிளவுஸ் கொடுப்பார்கள். அதை வைத்து விளையாட முடியாது.
கே: பாக்ஸர் ஆக என்ன தகுதி வேண்டும்?
ப: ஒழுக்கம் வேண்டும். இது இருந்தால்தான் காலையில் எழுந்து பயிற்சிக்கு வர முடியும். பயிற்சியாளர்களை மதிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை தெய்வ வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் நல்ல பயிற்சியாளர்களிடம் நல்ல பயிற்சி எடுக்க வேண்டும். நல்ல பயிற்சியாளர் இருந்தால்தான் பாக்ஸிங் கற்றுக் கொள்ள வருபவர்கள் முன்னேற முடியும்.
கே: நீங்கள் கடைசியாக விளையாடிய போட்டி எது
ப: கடைசியாக விளையாடியது சென்னையில் நடந்த தெற்காசிய போட்டிகள். இதில் தங்கம் வென்றேன். பாகிஸ்தானை தோற்கடித்து தங்க பதக்கம் வாங்கினேன்.
கே: ஆண்கள் மட்டும்தான் பாக்ஸிங் கற்றுக் கொள்ள முடியுமா
ப: அப்படி இல்லை. பெண்களுக்கும் பாக்ஸிங் இருக்கிறது. கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் மேரி கோம். எளிதில் மெடல் வாங்கக் கூடிய திறமை நம் தமிழக பெண்களுக்கு உள்ளது. பெண்களை பாக்ஸிங்கில் பயிற்சி கொடுத்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
கே: சார்பட்டா பரம்பரை படம் குறித்து உங்கள் கருத்து என்ன
ப: நல்லா எடுத்திருக்காங்க அந்த படம். இயக்குநர் ரஞ்சித் ஐசிஎஃப்பில் பயிற்சி எடுப்பார். நானும் அப்போது போயிருக்கிறேன். நானும் அவரை சந்தித்து பாக்ஸிங் குறித்து பேசியுள்ளேன். ஆனால் அவர் படம் எடுப்பது அப்போது எனக்கு தெரியாது. கடைசியாக ஒரு முறை பேசும் போதுதான் பாக்ஸிங் குறித்து படம் எடுப்பதை பா ரஞ்சித் என்னிடம் கூறினார்.
நீங்கள் எதற்காக பாக்ஸிங் கற்றுக் கொள்கிறீர்கள் என நான் கேட்ட போது நான் பாக்ஸிங் கற்றுக் கொண்டால்தான் படத்தில் நடிக்கும் நடிகர்கள் செய்யும் தவறு எனக்கு தெரியும் என்றார். பாக்ஸிங் குறித்து அந்த படத்தின் மூலம் நல்ல விழிப்புணர்வை ரஞ்சித் ஏற்படுத்திவிட்டார்.
கே: மீண்டும் பாக்ஸிங் உயிர்தெழுமா
ப: மீண்டும் சண்டையிட சார்பட்டா பரம்பரையும் இடியாப்ப நாயக்கர் பரம்பரையும் ஆரம்பித்துவிடுவார்கள் போல! நிச்சயம் இந்த இரு பரம்பரைகளிலும் ஒவ்வொரு அணி உருவாகும்.
கே: அந்த படத்தில் பஞ்ச்கள் எல்லாம் எப்படியிருந்தது.
ப: அந்த படத்தில் பயிற்சி கொடுக்க சென்றவர்கள் எல்லாம் எனது மாணவர்கள்தான். எனக்கு அந்த படத்தில் பீடி தாத்தா கேரக்டர் மிகவும் பிடித்தது. கடற்கரைக்கு நண்டு பிடிக்கும் காட்சிகளை விட தண்ணீரில் பஞ்ச் அடிக்க விட்டது நன்றாக இருந்தது. நானும் இதே போல் நீச்சல் குளத்தில் செய்திருக்கிறேன். அந்த நினைவுகள் எனக்கு வந்தது.
கே: பாக்ஸிங்கை வளர்க்க எந்தமாதிரியான கோரிக்கைகளை தமிழக அரசிற்கு வைக்கிறீர்கள்
ப: ஒரு ஏரியாவுக்கு ஒரு பாக்ஸிங் ரிங் வேண்டும். ஒரு ஏரியாவில் 2000- 3000 பாக்ஸர்கள் உள்ளார்கள். பாக்ஸிங் நடத்தக் கூடிய வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். பாக்ஸிங் கேம்ப் பட்டியாலாவில் மட்டும் உள்ளது. இதனால் ஹரியானா மாணவர்கள் சனிக்கிழமை கற்றுக் கொண்டு திங்கள் கிழமை வீடு திரும்பிவிடுவார்கள். ஆனால் மற்ற மாணவர்கள் அவ்வளவு தூரம் சென்றுவிட்டு வீட்டு தனிமையால் மன உளைச்சல் ஏற்பட்டு போக மறுக்கிறார்கள். எனவே கேம்ப் என்பது ஒரே இடத்தில் இருக்கக் கூடாது. சென்னையில் கூட நேஷனல் கேம்ப் வைக்கலாம். பாக்ஸிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் தேவானந்த்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications