மோடியும் முத்துராமலிங்க தேவரும் ஒன்னு.. இந்தியை ஒதுக்கினால் தமிழனா? - இயக்குநர் பேரரசு ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னையில் பேட்டியளித்த அவர், "இந்தி மொழி யாரும் ஆதரிப்பதால் வளர்ப்போவதில்லை. முதலில் தமிழை காப்பாற்றுவோம். இந்தியை தடுப்பதிலேயே குறியாக இருக்காதீர்கள்.

தமிழ் எவ்வளவு அழித்து வருகிறது தெரியுமா? சுற்றி பார்த்துவிட்டு சொல்லுங்கள் எத்தனை போர்டுகளில் தமிழ் இருக்கிறது என்றும்? எல்லாவற்றிலும் ஆங்கிலம்தான். போர்டில் இந்தி இருந்தால் தாரை வைத்து அழிக்கிறார்கள். அங்கு தமிழ் இல்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா?

 பிற மொழியை அழிக்காதீர்கள்

பிற மொழியை அழிக்காதீர்கள்

தமிழ் இல்லாத இடத்தில் எழுதுங்கள். இன்னொரு மொழியை அழிக்காதீர்கள். சாக கிடக்கும் நமது குழந்தைக்கு சோறு கொடுப்பீர்களா? அல்லது மற்றவரின் சோற்றில் உப்பில்லை என்பீர்களா? தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் தமிழ் பாடமே இல்லை. இன்று வளரும் மாணவர்களுக்கு தமிழ் எழுத தெரியவில்லை. படிக்கத் தெரியவில்லை. இதை கேட்க இங்கு யாரும் இல்லை.

தமிழை வைத்து அரசியல்

தமிழை வைத்து அரசியல்

இந்தியை திணிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். நம் தாய்மொழி தமிழை தக்க வைக்க வேண்டும் தானே? அதை யார் இங்கு செய்கிறார்கள். அதுகுறித்து யாருக்கும் கவலையில்லை. எல்லாமே அரசியல்தான். தமிழ் பற்று வேண்டும். ஆனால், தமிழை அரசியலாக்கக்கூடாது. இங்கு பல பேர் தமிழை அரசியலாக்குகின்றனரே தவிர யாரும் தமிழ் பற்றோடு குரல் கொடுக்கவில்லை.

தமிழ் என்ன விருந்தாளியா?

தமிழ் என்ன விருந்தாளியா?

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்குங்கள். பல பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக மட்டுமே உள்ளது. இதற்காக இங்கு யார் குரல் கொடுக்கிறார்கள். தமிழ் மொழி என்ன விருந்தாளியா? தமிழை வாழ வைப்பவர்தான் தமிழன். இந்தியை ஒதுக்கினால் தமிழன் என்று சொல்வதெல்லாம் வேஸ்ட். மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

இளையராஜா சாதிக்கு அப்பாற்பட்டவர்

இளையராஜா சாதிக்கு அப்பாற்பட்டவர்

இளையராஜா அம்பேத்கரை ஒப்பிட்டது அவருடைய விருப்பம். அது அவரது கருத்து. இதில் சாதியை கொண்டு வருகிறார்கள். பெரியார் இல்லை என்றால் இசையமைத்து இருப்பீர்களா என கேட்கிறார்கள். அவருக்கு முன் எத்தனையோ கவிஞர்கள் இருந்துள்ளார்கள். அவர்களையெல்லாம் பெரியாரா வளர்த்துவிட்டார். இளையராஜா சாதிக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒட்டுமொத்த தமிழருக்கும் சொந்தமானவர்.

முத்துராமலிங்க தேவரும் மோடியும் ஒன்று

முத்துராமலிங்க தேவரும் மோடியும் ஒன்று

கருத்து சொல்வது அவரது உரிமை. இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டார். என்னை பொறுத்தவரை இன்னொருவரோடும் ஒப்பிட்டு இருக்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்க தேவரோடு. அவர்தான் தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று சொன்னார். மோடியும் தேசியத்தோடும் தெய்வீகத்தோடும் இருக்கிறார். உண்மையாக முத்துராமலிங்க தேவரோடுதான் மோடியை ஒப்பிட்டு இருக்க வேண்டும்.

 இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பதா?

இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பதா?

தேசியத்தை நேசிப்பவரை எனக்கு பிடிக்கும். நான் ஆத்திகன். நாத்திகம் பேசிக்கொண்டு இந்து மதத்தை மட்டும் இழிவாக பேசுபவரை பிடிக்காது. ஏசுவும் இல்லை, அல்லாவும் இல்லை என்று சொல்லிவிட்டு சிவனை இல்லை என்று சொல்லுங்கள். அதுதான் ஆண் மகனுக்கு அழகு. அவரவர் மதத்திற்கு நம்பிக்கையாக இருங்கள். எந்த மதத்தை வழிபட்டாலும் பக்தியாக இருப்பவரை எனக்கு பிடிக்கும். பக்தியாக இருந்தால் ஒழுக்கம் வரும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+