நாட்டில் கள்ள தொடர்பே குத்தமில்லை.. மீ டூ எப்படி குத்தமாகும்? ஆர்.வி. உதயகுமார் கேள்வி
மீ டூ குறித்து இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நாட்டில் கள்ளத்தொடர்பே தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என்று திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீப காலமாக மீ டூ என்ற இரண்டு எழுத்து நாடு முழுதும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. நிறைய பெண்கள் தங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மத்திய அமைச்சர்
இதில் பெரும்பாலும் திரைப்பட பிரபலங்களே அதிக அளவில் கருத்துக்களையும், புகார்களையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த மீ டூ புகாருக்கு மத்திய அமைச்சர், பாடலாசிரியர், இயக்குனர்கள், நடிகர்கள் என்று பட்டியல் நீள்கிறது. மத்திய அமைச்சர் விவகாரத்தில் பிரதமரே தலையிடும் அளவுக்கு விவகாரம் போய்விட்டது.
[என்னையும் கண்ட இடத்தில் தொட்டார்கள்.. பாலியல் சீண்டல் குறித்து யாஷிகா ஓபன் டாக்! ]

குற்றச்சாட்டுகள்
இதனால் தமிழகம் முழுக்க பரபரப்பும், விவாதமும் தொத்திக் கொண்டு இன்னமும் நீடித்து வருகிறது. இது சம்பந்தமாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் சிலர் விளக்கம் அளிக்கிறார்கள், சிலர் அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருக்கின்றனர்.

எவனும் புத்தனில்லை
இந்நிலையில், திரைப்பட இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் மீ டூவிற்கு எதிரான ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். அந்த கேள்வியை சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கேட்டிருக்கிறார். சென்னையில் எவனும் புத்தனில்லை என்ற திரைப்பட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

எப்படி குத்தமாகும்?
அப்போது "திருமணத்துக்கு பிறகு கள்ளத் தொடர்பு வைத்திருந்தால் கூட தவறில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில்,மீ டூ விவகாரம் எப்படி தவறாகும்? என கேட்டுள்ளார். மேலும் ஒரு சின்மயியால் இந்த சமூகத்தில் உள்ள ஆண்களை மாற்றிவிட முடியுமா? என்றும் ஆர்.வி.உதயகுமார் மற்றொரு கேள்வியையும் எழுப்பினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications