என்னையும் கண்ட இடத்தில் தொட்டார்கள்.. பாலியல் சீண்டல் குறித்து யாஷிகா ஓபன் டாக்!
சென்னை: சினிமாவில் எனக்கும் பாலியல் சீண்டல்கள் இருந்தன. போலீஸ்காரர்களும் என்னை தப்பான கண்ணோட்டத்திலேயே பார்த்தனர் என்று யாஷிகா தெரிவித்தார்.
மீ டு இயக்கம் மூலம் பெண்கள் சந்தித்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வண்டி வண்டியாக கொட்டி வருகின்றனர். இதில் சில பிரபலங்களின் பெயர்கள் பாதிக்கப்படுவதோடு பிரபலங்களும் பாதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் வைரமுத்து மீது சின்மயி புகார், சுசி கணேசன் மீது லேனா மணிமேகலை, அமலா பால் புகார், அர்ஜூன் மீது ஸ்ருதி ஹரிஹரன் புகார் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

யாஷிகா
இந்நிலையில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் தனக்கு ஏற்பட்ட பாலியல் புகார்கள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறுகையில் நான் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு செல்லும் போது எனது ஆடைகளை சரி செய்வது போலும், முத்தக் காட்சியில் நடிக்க சொல்லித் தருவது போலவும் சிலர் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர்.

ஆதரவு
நான் அந்த சமயத்தில் என் அம்மாவுடன் எப்படியோ தப்பி சென்றேன்.எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. எனவே மீ டு இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன்.

நடவடிக்கை இல்லை
காவல் துறையிலும் சில மோசமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து நான் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறேன். ஆனால் அதன் மீது நடவடிக்கை எல்லாம் எடுக்க மாட்டார்கள்.
பாலியல் தொல்லைகள் குறையும்
சில போலீஸார் கூட என்னை தப்பான கண்ணோட்டத்தில்தான் பார்ப்பர். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை துணிந்து வெளியில் சொல்லி தவறானவர்களை அடையாளம் காட்டும் போதுதான், பாலியல் தொல்லைகள் குறையும் என்றார் யாஷிகா.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications