ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்த சிறுத்தை சிவா - அண்ணாத்த குறித்து அடுத்த கட்ட ஆலோசனை
மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஓய்வில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு இயக்குநர் சிறுத்தை சிவா இன்று அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை போயஸ்தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இயக்குனர் சிவா சந்தித்து பேசியுள்ளார். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரஜினியின் 168 ஆவது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஹைதரபாத்தில் நடைபெற்றது.
படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்துக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் சென்னைக்கு திரும்பினார்.
மருத்துவர்களும் ஓய்வில் இருக்கும்படி வலியுறுத்தவே, தனது அரசியல் பயணத்திற்கு முழுக்கு போட்டார் ரஜினிகாந்த். இதனிடையே இப்படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி ரிலீசாகும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என அண்மையில் அறிவிப்பு வந்த நிலையில், தற்போது மீண்டும் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவது குறித்து அவர் ரஜினிகாந்துடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்திற்கு பதிலாக சென்னையில் படப்பிடிப்பை நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications