ரிலீஸுக்கு தயாராக இருந்த 3வது படம்.. இயக்குநர் சுரேஷ் சங்கையா மரணத்தால் சோகத்தில் திரையுலகம்!
சென்னை: 'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41. யோகிபாபு நடிப்பில், "கெணத்த காணோம்' என்ற படத்தை இயக்கி வந்த சுரேஷ் சங்கையா, அப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணித்துள்ளது, தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தவர் சுரேஷ் சங்கையா. காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டனின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுரேஷ் சங்கையா. அதன்பிறகு தனது பாணியில் கிராமக் களம் சார்ந்த படங்களை இயக்கத் தொடங்கினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் தான் சுரேஷ் சங்கையா இயக்கிய முதல் படம். புதுமண தம்பதியர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு ஒன்றை பலி கொடுக்கச் சென்று இருப்பார்கள். அப்போது ஒரு கொலை வழக்கில் அவர்கள் சிக்கிக்கொள்வது தான் கதை. விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரியளவில் கவனம் பெற்றது. பல விருதுகளையும் வென்றது.
அதைத்தொடர்ந்து கடந்த 2023-ல் 'சத்திய சோதனை' படத்தை இயக்கி இருந்தார் சுரேஷ் சங்கையா. ஒரு கொலையை மையமாக வைத்து பிளாக் காமெடி பாணியில் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். பிரேம்ஜி நாயகனாக நடித்த இந்தப் படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து, நகைச்சுவை நடிகர் செந்தில் நாயகனாக நடிக்க, ஒரு படத்தை இயக்கினார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், படம் வெளியாகவில்லை.
இதையடுத்து, தனது அடுத்த திரைப்படத்தை யோகிபாபுவை வைத்து இயக்கி வந்தார் சுரேஷ் சங்கையா. 'கெணத்த காணோம்' என டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபேக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்ததாகவும், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியீட்டுக்கு தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, கல்லீரல் பாதிப்படைந்து, சிகிச்சை பலனின்று நேற்று வெள்ளிக்கிழமை காலமாகியுள்ளார்.
கோவில்பட்டி அருகில் உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் சங்கையா. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் சங்கையாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அடுத்த படத்தின் ரிலீஸ் விரைவில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இயக்குநர் சுரேஷ் சங்கையா மரணமடைந்துள்ளது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications