தமிழ்நாடா? தமிழகமா? இயக்குநர் வெற்றிமாறன் ஒற்றை வார்த்தையில் சொன்ன நச் பதில்!
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று அழைப்பதை விடவும், தமிழகம் என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், தமிழ்நாடு என்று அழைப்பதே சரி என்று பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர் வெற்றிமாறன். காவல்துறையின் உரிமை மீறல், சாதிய தீண்டாமை, மக்களின் தேவை உள்ளிட்ட பல்வேறு சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கியவர்.
அதுமட்டுமல்லாமல் சமகால தமிழ் சினிமாவில் சமூக அக்கறையுடன் அரசியல் தெளிவும் கொண்ட இயக்குநராகவும் வெற்றிமாறன் அறியப்படுகிறார். இதற்காகவே இயக்குநர் வெற்றிமாறனை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடப்பட்டு வருகிறார்.

இயக்குநர் வெற்றிமாறன்
சில மாதங்களுக்கு முன் ராஜராஜ சோழன் விவகாரம் குறித்து வெற்றிமாறன் பேசிய கருத்துகள் அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தேசிய அரசியல் தொடர்பாகவும் வெற்றிமாறன் பேசும் கருத்துகள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடா, தமிழகமா என்று விவாதம் தமிழக அரசியல் பூதாகரமாய் மாறியுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
சில நாட்களுக்கு முன் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு என்று அழைப்பதை விடவும், தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார். இதற்கு பாஜகவினர் ஆதரவளித்து வருகின்றனர். ஆனால் திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாடு மட்டுமே சரி என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இலக்கிய திருவிழா வெற்றிமாறன்
இதனிடையே சென்னையில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். இந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்ட இளைஞர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வெற்றிமாறன் கூறுகையில், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடப்பது மிகச்சிறந்த ஒன்றாகவே பார்க்கிறேன். அதுமட்டுமல்லாமல் கலைகள் சார்ந்த ஆளுமைகளோடு இளைஞர்கள் உரையாடுவது சிறந்த ஏற்பாடு.

தமிழ்நாடு
சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முன்னோக்கி நகர்வதற்கான வழி இது என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஆளுநரின் தமிழ்நாடு சர்ச்சை குறித்து தமிழ்நாடா, தமிழகமா? எது சரி என்ற கேள்விக்கு, தமிழ்நாடு என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார். இயக்குநர் வெற்றிமாறன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications