இயக்குநர் வெற்றிமாறனுக்கு தந்தை பெரியார் விருது.. எஸ்டிபிஐ விழாவில் திரண்ட திமுக, கூட்டணி கட்சியினர்
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனுக்கு தந்தை பெரியார் விருதையும், காயிதே மில்லத் விருதினை திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு வழங்கி எஸ்டிபிஐ கட்சி கவுரவித்தது.
ஆண்டுதோறும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்தில் ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா சென்னை பிராட்வே சாலையில் உள்ள ஹயாத் மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். தமிழக சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும், வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, திராவிடர் கழக பொருளாளர் வீ குமரேசன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். காயிதே மில்லத் விருதினை திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்புக்குழு தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் விருதினை திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருதினை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை கல்வியாளரும், மைசூர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் லெ.ஜவஹர் நேசனுக்கும் வழங்கப்பட்டது.

புரட்சியாளர் பழனிபாபா விருதினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனுக்கும், கவிக்கோ விருதினை மூத்த எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கும், நம்மாழ்வார் விருதினை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் முகம்மது அலிக்கும், அன்னை தெரசா விருதினை சென்னை திருவொற்றியூர் சமூக சேவகர் அலி பாஷாவுக்கும், சயீத் சாஹிப் விருதினை எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த வேலூர் ஆ.சே.மு. ஷேக் மீரானுக்கும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விருதுகளை வழங்கி உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், "கடந்த 2017ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறந்த ஆளுமைகள், துறை சார்ந்த சேவையாளர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து தலைவர்களின் பெயரில் விருதுகளை வழங்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி கெளரவித்து வருகின்றது.

ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பெயரால் விருது, அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக வரக்கூடிய தகுதி, ஒரே மொழியான தமிழ் மொழிக்கு தான் உண்டு என உரத்து முழங்கிய கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருது, சமூக நீதிக்கு வழிகாட்டிய, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த தந்தை பெரியார் பெயரில் விருது, கல்விக்கு கண் தந்தவர் மட்டுமல்ல, தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக தொலைநோக்கு பார்வையோடு அணைகளை கட்டிய காமராஜர் பெயரில் விருது, இயற்கைக்காக போராடிய இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பெயரால் விருது, தமிழுக்கு மிகச்சிறந்த கவிதைகளை தந்த கவிக்கோவின் பெயரால் விருது, இன்றைக்கு இருக்கக்கூடிய பாசிச பயங்கரவாதம் என்னவென்று தெரியாத அந்த காலக்கட்டத்தில் அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பழனி பாபா பெயரில் விருது, மனிதநேயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த அன்னை தெரசாவின் பெயரில் விருது என்று, ஒரு கொள்கைவாதிகளை கௌரவிக்கும் விதமாகத்தான் எஸ்.டி.பி.ஐ. கட்சி விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு முதல் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்து களம் கண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் அவர்களின் பெயராலும் விருது வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு, இவர்களது சேவை சமூகத்துக்கு தேவை என்பதை உணர்ந்தே சிறந்த ஆளுமைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி விருதுகளை வழங்கி கெளரவித்து பாராட்டி வருகின்றது. நாடு இருக்கும் சூழலில் இந்த ஆளுமைகளின் சேவைகள் இந்த நாட்டிற்கு மென்மேலும் தேவை என்பதை வலியுறுத்தும் விதமாவும், அவர்கள் மென்மேலும் பணி செய்ய வேண்டிய கடமை உள்ளது என்பதை வலியுறுத்தியும் இந்த விருதினை நாங்கள் வழங்குகின்றோம்.
அந்த நம்பிக்கையை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம். விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்." என்றார். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ, நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications