'மிடாஸ்' விவேக் மாமனார் கட்டை பாஸ்கரிடம் கிடுக்குப்பிடி விசாரணை- செம்மரக் கடத்தலில் உருளும் தலைகள்?
சென்னை: செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் வருவாய் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கட்டை பாஸ்கரிடம் துருவி துருவி விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து செம்மரக் கடத்தலில் மேலும் பலர் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
கட்டை பாஸ்கர்.. தமிழகம்- ஆந்திரா போலீசாரின் தேடுதல் வேட்டையில் பிரதான நபர். செம்மரக் கடத்தலின் காட்பாதராக இருப்பவர் கட்டை பாஸ்கர். இவரது மகளைத்தான் சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தை ஜெயலலிதா ஏற்க மறுத்தார். இத்தனைக்கும் விவேக், போயஸ் கார்டனிலேயே வளர்ந்தவர். ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை. ஆனாலும் கட்டை பாஸ்கர் என்ற கடத்தல் மன்னன் குடும்பத்தில் விவேக் திருமணம் செய்வதை ஜெயலலிதா ஏற்கவில்லை.
விவேக்கைப் பொறுத்தவரையில் சசிகலா குடும்பத்தின் மிடாஸ் மதுபான ஆலை, ஜெயா டிவி உள்ளிட்டவைகளை நிர்வகித்து வருகிறார். சசிகலா சிறையில் இருந்த போது விவேக்குக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே பல மனக்கசப்புகள் ஏற்பட்டதற்கும் இந்த நிர்வாகங்கள் அடிப்படையிலான பொருளாதார சிக்கல்தான் காரணமாம்.

சசிகலா, விவேக் குடும்பங்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடந்தால் அதில் கட்டை பாஸ்கர் வீடும் சிக்குவது உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு சசிகலாவின் ஒட்டுமொத்த சொந்தங்களுக்கும் எதிராக வருமான் வரித்துறை மெகா ரெய்டு நடத்தியது. அதில் கட்டை பாஸ்கர் வீடும் அடக்கம்.
அதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டை பாஸ்கர் ஆந்திரா போலீசிடம் சிக்கினார். அப்போது ஆந்திரா போலீசாரிடன் நான் யார் தெரியுமா? என உதார்விட்டார் கட்டை பாஸ்கர். ஆனால் போலீசார் கொத்தாக அவரை கைது செய்தது. இந்த நிலையில் மீண்டும் செம்மரக் கடத்தல் வழக்கில் கட்டை பாஸ்கர், வருவாய்ப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டை பாஸ்கரிடம் தொடர்ந்து வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செம்மரக் கடத்தல் தொடர்பான மேலும் சில புள்ளிகள் தொடர்பான விவரங்களை பெறுவதில் வருவாய்ப் புலனாய்வுத்துறையினர் மும்முரமாக இருக்கின்றனராம். கட்டை பாஸ்கர் இதற்கு முன்னர் சிக்கி இருந்தாலும் இப்போது அவரிடம் சில விவரங்களைப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருக்கின்றனராம். அதனால்தான் இந்த கைது நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டதாம்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications