Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 உரிமைதொகை! மாற்றுதிறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப மகளிருக்கும் உண்டு -ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் உள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2021 சட்டசபை தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வியூகங்கள் வகுக்கப்பட்டு வந்தன.

Disabled and old age pension receiving family woman can also apply for Rs.1000 Scheme, says Stalin

இதையடுத்து தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள குடும்ப தலைவிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு மட்டும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்க முடிவு செய்யபட்டுள்ளது.

அதன்படி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மறைந்த முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்ட பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படட்டது.

இதையடுத்து 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்துக்கு மக்கள் விண்ணப்பம் செய்வதற்கான முகாம்கள் துவங்கின. குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் உரிமைத்தொகைக்கான டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் பூர்த்தியிட்டு வழங்கி வருகின்றனர். முதற்கட்ட முகாம் முடிவடைந்துள்ளன. 2வது கட்ட முகாம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை ஒரு கோடியே 54 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பம் பெற முடியாதவர்களுக்கு சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ரூ.1000 வழங்குவதற்கான கலைஞர் உரிமைத்தொகை திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பம் செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளா்ர.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியாகி உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இன்று கலைஞர் உரிமைத்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கனேவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் கீழ் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும் இந்தி திட்டத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை அளிக்கப்பட்டது.

இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் வருவாய்த்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் உரிமை திட்டத்தின் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்க ஆணையிட்டுள்ளார். 22.07.2023 ல் நடந் அமைச்சரவை கூட்ட முடிவின்படி இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற மற்றுமு் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம்.

மேலும் இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதிய தெிட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு முதயோர் ஓய்வூதி திட்டம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களின் ஓய்வூதியத்தை ரூ1,2000 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரு நபர், சமூக பாதுகாப்பு திட்டங்களிலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்ததால் அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஙர் மகளிர் உரிமை திட்டத்ின் பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதல்வர் விரிவாக ஆய்வு செய்தார்.

முதியோர் கண்ணியமான வாழ்வை உறுிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரை பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்று அரசு கருதுகிறது. அதேவேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால் அந்த குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஙர் மகளிர் உரிமை திட்டத்தின் பலன்பெறுவது தடைப்படக்கூடாது என முதல்வர் ஆணையிட்டுள்ளார். எனவே இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதி தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள், முதியோர் ஓய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்ப தலைவிகள் விண்ணப்பங்கள் செய்ய ஆகஸ்ட் 18,19, 20ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த தினங்களில் இவர்கள் விண்ணப்பம் செய்யலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+