2 ஆண்டுக்கு ஒருமுறை பேரிடர் வரலாம்! இந்த தலைமுறையினர் வாழ்க்கை இப்படித்தான்.. பூவுலகின் சுந்தர்ராஜன்
சென்னை: 2 ஆண்டுக்கு ஒருமுறை பேரிடர் வரலாம்.. இந்த தலைமுறையினர் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தூத்துக்குடியில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதுமே இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவிலும் அதீத வறட்சி, பெரு வெள்ளம் என இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சமீப காலமாக தென் இந்தியாவும் அதிக இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அதீத மழை ஏற்பட்டு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் மறைவதற்குள் தென் மாவட்டங்களில் பெய்த பேய் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது. இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பே பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தூத்துக்குடியில் நிகழ்ச்சில் ஒன்றில் காலநிலை தாக்கம் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.
அதில் சுந்தர்ராஜன் பேசியதாவது:- வெள்ளம், வறட்சி, தீவிரமான ஒரு வெப்ப அலைகள் போன்ற பல்வேறு விஷயங்களால் தாக்கொண்டு நம்முடைய எதிர்காலத்தை பற்றி ஒரு கவலையோடும், அச்சத்தோடும் நாங்கள் உங்கள் முன் நிற்கிறோம். ஏன் இப்படி அச்சப்படுகின்றோம். கடந்த 2021-ம் ஆண்டு உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து உலக பன்னாட்டு நிறுவனம் ஐபிபிசி என்ற ஒரு அமைப்பு காலநிலை மாற்றம் குறித்த பல்வேறு ஆய்வுகளை வெளியிட்டு வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் 5 அறிக்கைகள் வந்துவிட்டன. தற்போது 6 வது முறையாக வந்துள்ள அறிக்கை கிட்டத்தட்ட எச்சரிக்கை அறிக்கையாக வந்துள்ளது. அந்த அறிக்கை என்ன சொல்கிறது என்று தெரியுமா?.. பிப்ரவரி மாதம் 1986ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலகத்தில் பிறந்த எந்த ஒரு குழந்தையும் தன்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு இயல்பான மாதத்தை கூட பார்த்தது இல்லை என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்போது பிறக்கும் பிள்ளைகள் தனது 30வது வயதை எட்டும்போது, 2050ம் ஆண்டுக்குள் அந்த பிள்ளைகளின் தாத்தா பாட்டி அவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறை சந்தித்த பேரிடரை இன்று பிறக்கின்ற குழந்தைகள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை சந்திக்கும் என்று அந்த அறிக்கை சொல்லியிருக்கிறது. யோசித்து பாருங்கள்.. ஒரு பேரிடர் வரும் மீண்டெழுவோம்.. இன்னொரு பேரிடர் வரும்.. மீண்டும் மீண்டெழுவோம்..
அதனால் தான்நாங்கள் சொன்னோம்.. இனிமேல் இயல்பான வாழ்க்கை என்பது பேரிடர்களுக்கு இடையில் தான் என்று.. நீங்கள் யோசித்து பாருங்கள்.. 2019 செப்டம்பர் மாதம் லாக்டவுன் வரும், முமமூடியை போடனும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கனும் என்று முன்பு சொல்லியிருந்தால் நாம் நம்பியிருப்போமா.. நம்பியிருக்க மாட்டோம்.. அதனால் நாங்கள் சொல்கிறோம்.
அறிவியல் நமக்கு சொல்கிறது.. நாம் கடந்த 180.. 200 ஆண்டுகளாக செய்து வந்ததை திருத்தி கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தை பார்க்க வேண்டும். இந்த அறிவியல் எங்கிருந்து வந்தது. உலகத்தின் மிகப்பெரிய பொருளாதார பேரிடர் கத்ரினா புயல்.. கத்ரினா புயல் ஏற்படுத்தியது தான் மிகப்பெரிய பொருளாதார பேரிடர். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications