ஸ்டிரைக் அறிவித்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள்! பணிக்கு வராவிடில் ஒழுங்குநடவடிக்கை! எம்டிசி வார்னிங்
சென்னை: வரும் 9 ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் உள்ளன. இந்த தொழிற்சங்கங்கள், போக்குவரத்து துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தான், போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும், பணியில் உள்ளவர்கள், ஓய்வு பெற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த மாதம் 19-ந் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் வழங்கியது.
இது தொடர்பாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படும் வரை வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், வரும் 9 ஆம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பணிக்கு வராத தொழிலாளர் மீது நிலையான விதிகளின் படி சட்டப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தூண்டிவிடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு பின்னர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படும்" என்று மாநகர போக்குவரத்து கழகம் எனப்படும் எம்.டி.சி தெரிவித்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications