10 ரூபாய் குளிர்பான ரூபத்தில் எமன்..தாய் தந்தை கண்முன் சிறுமி பரிதாப பலி! தமிழகம் முழுவதும் சோதனை!
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கடையில் வாங்கி குடித்த 10 ரூபாய் குளிர்பானத்தால் 6 வயது சிறுமி உயிர் இழந்ததாக கூறப்படும் சம்பவத்தையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கடைகளில் விற்கப்படும் குளிர்பான மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சோதனையை துரிதப்படுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டம் கனிகிலுப்பை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி ஜோதிலட்சுமி இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு ரித்தீஷ் (வயது 9) என்ற மகனும் காவியா ஸ்ரீ (வயது 6) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர். மகன் ரித்திஷ் நான்காம் வகுப்பும் மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காவியாஸ்ரீ நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் குளிர்பானம் பாட்டிலை வாங்கி வந்து குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி மூக்கிலும் வாயிலும் நுரை வந்து மயங்கியுள்ளார். இதனை கண்ட பெற்றோர் காவியாஸ்ரீயை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ்குமார் அளித்த தகவலின் பேரில் தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பத்து ரூபாய் மலிவு குளிர்பானம் வாங்கி குடித்ததாலேயே தன் மகள் இறந்ததாகவும், அந்த பாட்டிலில் தயாரிப்பு தேதி காலாவதி தேதிகள் எதுவும் அச்சிடப்படவில்லை என்றும் தெரிவிக்கும் ராஜ்குமார் இதுபோன்று வேறு எந்த குழந்தைக்கும் நேராத வண்ணம் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கின்றார். இதுகுறித்து உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே குளிர்பானம் குடித்ததால் உயிரிழந்ததா அல்லது வேறு காரணம் ஏதேனுமா என தெரியவரும். இதனிடையே செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமி குடித்த குளிர்பான ஆலையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிஸ்ஸோ, லவ்வோ, டெய்லி, ஹார்ட்டின் உள்ளிட்ட பல பெயர்களில் 10 ரூபாய் குளிர்பானங்கள் தயார் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. மேங்கோ, ஆரஞ்ச், பன்னீர், லெமன், சோடா, உள்ளிட்ட பல்வேறு ஃப்ளேவர்களில் குளிர்பானங்கள் தயாராகின்றன. அதில் சில கம்பெனிகள் உரிய அனுமதி பெற்று தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் பெரும்பலானவை குடிசைத் தொழில் என்ற பெயரில் வீடுகளில் தரமற்று தயார் செய்யப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மேலும் சில குளிர்பானங்கள் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை இன்றி விற்கப்படுகின்றன. இதனாலேயே இது போன்ற விவகாரங்கள் எழுகின்றன என புகார் கூறுகின்றனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உரிய சோதனை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கடைகளில் விற்கப்படும் குளிர்பான மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சோதனையை துரிதப்படுத்தியுள்ளனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications