சென்னை லாக்டவுன் அறிவிப்பால் திடீர் மாற்றம்.. பல மாவட்டங்களில் பரவிய கொரோனா.. ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு லாக்டவுன் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா பாதிபபு வேகமாக அதிகரித்துள்ளது. முன்பு சென்னையில் கொரோனா பாதிப்பு 80 சதவீதமாக பிற மாவட்டங்களில 20 சதவீதம் ஆகவும் இருந்தது. ஆனால் லாக்டவுன் அறிவிப்பு வெளியான பின்னர் பிற பகுதிகளில் 40 சதவீதம் ஆகவும், சென்னையில் 60 சதவீதமாகவும் மாறி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு வழக்கமான அளவிலேயே உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் கடந்த ஜூன் 15ம் தேதி நிலவரப்படி 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்துது. ஒட்டுமொத்தமாக 46,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 1257 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆக இருந்தனர். அதேபோல் அதிகபட்ச பாதிப்புகள் என்பது சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தான் இருந்தது. மற்ற பகுதிகளில் பாதிப்பு சொற்ப எண்ணிக்கையில் தான் இருந்தது.

சொந்த ஊர் வந்தனர்

சொந்த ஊர் வந்தனர்

ஆனால் அதன்பிறகு சென்னைக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதையடுத்து பல்லாயிரம் மக்கள் சென்னையை விட்டு புறப்பட்டு சொந்த ஊர் வர தொடங்கினர். இபாஸ் வாங்கியும் இ பாஸ் இல்லாமலும் பலர் மற்ற மாவட்டங்களுக்கு பாய்ந்தோடினர். அப்படி வந்தவர்களை எந்த மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்காமல் அப்படியே வீட்டிற்குள் விடவில்லை. ஏன் பக்கத்து வீட்டுக்கார்கள் கூட இருக்கவிடவில்லை என்பது நிதர்சமான உண்மை.

அதிகரித்த பாதிப்பு

அதிகரித்த பாதிப்பு

திருட்டுத்தனமாக வந்தவர்கள் ஆக இருந்தாலும், இபாஸ் வாங்கி வந்தவர்களாக இருந்தாலும் அத்தனை பேரையும் தூக்கி கொண்டுசென்றது அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை. சென்னையில் இருந்து வந்துள்ளார் என்ற தகவல்கள் கிடைத்த உடனேயே அவர்களை தேடி கண்டுபிடித்து அவரையும் அவரை சார்ந்தோரையும் சோதிக்கும் பணி தீவிரமானது. தற்போது பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பலரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் தான் என்று கூறப்படுகிறது.

ஆறுநாளில் கடும்பாதிப்பு

ஆறுநாளில் கடும்பாதிப்பு

இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெறும் ஆறு நாளில் 17ஆயிரம் பேருக்கு தொற்று பாதித்துள்ளது. அதாவது தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் இந்த ஆறு நாளில் சுமார் 300 பேர் இறந்துள்ளார்கள். கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் முழு லாக்டவுனால் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதேநேரம் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அதிகமான பாதிப்பு

அதிகமான பாதிப்பு

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 41,172 பேரும், செங்கல்பட்டில் 3,745 பேரும், திருவள்ளூரில் 1922 பேரும், திருவள்ளூரில் 2534 பேரும், காஞ்சிபுரத்தில் 1159 பேரும், திருவண்ணாமலையில் 1060 பேரும், கடலூரில் 765 பேரும், மதுரையில் 705 பேரும், திருநெல்வேலியில் 640 பேரும், தூத்துக்குடியில் 577 பேரும், விழுப்புரத்தில் 581 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும், சேலத்தில் 335 பேரும், அரியலூரில் 420 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்னல் வேகம்

மின்னல் வேகம்

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 17683 பேரும், செங்கல்பட்டில் 1762 பேரும், திருவள்ளூரில் 1257 பேரும், காஞ்சிபுரத்தில் 561 பேரும், திருவண்ணாமலையில் 598 பேரும் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரையில் 316 பேரும், தூத்துக்குடியில் 207 பேரும், திருநெல்வேலியில் 208 பேரும் வேலூரில் 368பேரும் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். மேலே சொன்ன மாவட்டங்களில் கொரோனா கடந்த ஒரு வாரத்தில மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+