‛‛விவாகரத்து கடினமானது’’.. சோயிப் மாலிக்கை பிரியும் சானியா மிர்சா? இன்ஸ்டாகிராமில் உருக்கம்
சென்னை: இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில் ‛‛விவாகரத்து கடினமானது’’ எனக்கூறி வெளியிட்ட நீண்ட பதிவு என்பது அவர் தனது கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை பிரிய உள்ளாரா? என்ற பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர். இவர்
2003-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை இந்தியா சார்பில் டென்னிஸ் விளையாட்டின் அடையாளமாக இருந்தார்.

இந்தியாவில் இருந்து ஆண்கள் மட்டுமே டென்னிஸ் விளையாடி வந்த நிலையில் சானியா மிர்சா அந்த விளையாட்டில் நுழைந்து சாதித்து காட்டினார். சானியா மிர்சா டென்னிஸ் விளையாட அவர் பிறந்த சமூகமே தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை மீறி சாதித்து காட்டினார்.
2009 ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவு, 2012 பிரெஞ்சு ஓபன், 2014 அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றார். மேலும் 2015ல் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு, 2015 அமெரிக்க ஓபன், 2016 ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றினார். இதுதவிர மேலும் பல போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு சானியா மிர்சா ஓய்வை அறிவித்தார்.
முன்னதாக சானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை இருக்கும் நிலையில் அவரது திருமணமும் விவாதத்தை கிளப்பியது. ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும் பாகிஸ்தானின் சோயிப் மாலிக்கை அவர் கரம் பிடித்து இருந்தாலும் கூட இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் அரங்கில் விளையாடி வந்தார்.

சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவரது பெயர் இசான் மிர்சா மாலிக். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு முதல் சானியா மிர்சா-சோயிப் மாலிக் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக இருவர் தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மாறாக சானியா மிர்சா தனது கணவர் சோயிப் மாலிக்குடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை தனது வலைதள பக்கங்களில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இதனால் அவர்கள் தொடர்பாக வெளியான விவாகரத்து தொடர்பான செய்தி வதந்தி என கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி என்பது அவர்கள் விவாகரத்து தொடர்பான தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது.
சானியா மிர்சா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ள ஸ்டோரியில், ‛‛திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது தான். இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள். உடல் பருமனாக இருப்பதும், பிட்டாக இருப்பதும் கடினமானது தான். இதில் உங்களுக்கான கடினமான ஒன்றை தேர்வு செய்யுங்கள். கடனில் இருப்பதும், நிதி விஷயத்தில் மிகச்சரியாக இருப்பதும் கடினமானது தான். இதில் ஒரு கடினத்தை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
தொடர்புடன் இருப்பதும், தொடர்பு இல்லாமல் இருப்பதும் கடினமானது தான். இதில் கடினமானதை தேர்வு செய்யுங்கள். வாழ்க்கை என்பது எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமானதாக தான் இருக்கும். ஆனால் நம் எந்தமாதிரியான கடினம் என்பதை நாம் தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமான தேர்ந்தெடுங்கள்’’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் இன்ஸ்டாகிராமில் சோயிப் மாலிக்குடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை சானியா மிர்சா நீக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சானியா மிர்சாவின் இந்த ஸ்டோரி என்பது அவர் தனது கணவர் சோயிப் மாலிக்குடன் விவாகரத்து பெற்று பிரிகிறாரா? என்ற பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications