One Sun- One Sekar Babu: ஒரே சூரியன்- ஒரே சேகர்பாபுதான்! அப்பாவிடம் ஒரே போடு போட்ட திவ்யா சத்யராஜ்
சென்னை: ஒரே சூரியன்- ஒரே சேகர்பாபு என சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் சேகர் பாபுவை போல் யாராலும் செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் சத்யராஜ் மகளும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளருமான திவ்யா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் அருமையான தலைவர். ஏனென்றால், திரையில் வந்து டான்ஸ் ஆடுகின்றவர் தலைவர் கிடையாது.. தரையில் இறங்கி அடிக்கிறார் பாருங்க அவர் தான் தலைவர்.. எவன் செத்தால் எனக்கு என்ன என்று படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மேடம் போல ஆபீஸ் ரூமில் இருந்து லாஜிக்கே இல்லாமல் ஸ்லோமோஷன் ல பேசுகின்றவர் தலைவர் கிடையாது.
துபாய் பயணத்தை கேன்சல் செய்துவிட்டு மக்களுக்காக ஓடி வந்தார் பாருங்க அவர் தான் தலைவர். கரூர் சம்பவத்தை பற்றி லாஜிக்கே இல்லாமல் புது கட்சியில் இருந்து வந்தவங்க சில கேள்விகளை கேட்டாங்க.. ஏன் செந்தில் பாலாஜி கரூர் சம்பவத்தின் போது ஆஸ்பத்திரிக்கு எப்படி உடனே வந்தார் என கேட்டாங்க.. அவருடைய எஃபிசென்சிய காண்பிக்கிறது.
ஏன் அன்பில் மகேஷ் அண்ணா அழுதார் என்று கேட்கிறாங்க.. ஏன் என்றால் அவருக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. ஏன் ஜோதிமணி மேடம் ஓடி வந்தார்கள்.. ஜோதிமணி மேம் ஓடி வந்தது அவங்களுக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க.. சும்மா லாஜிக்கே இல்லாமல், நீங்க பெர்மிசன் கொடுக்கவில்லை. கொடுக்கவில்லை என சொல்கிறார்கள். ஏன் எல்லாத்தையும் எங்க கிட்ட கேட்டா செய்யுறீங்க.. நாங்க என்ன பிரின்ஸ்பல்.. நீங்க எல்.கே.ஜி ஸ்டூடண்டா.. எல்லாத்தையும் எங்க பெர்மிசனோடு தான் பண்றீங்களா.. எனவே கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க..
காவல்துறை எதுக்கு இருக்காங்க.. நம்மளை பாதுகாக்கிறதற்கு.. ஆனால் காவல்துறை மீது பால் வீசுறுது.. மரத்து மேல ஏறுகிறது.. காவல்துறையை கடித்து வைக்கின்றது.. இதையெல்லாத்தையும் ஒரு தலைவர் கண்ட்ரோல் பண்ணனுமா வேண்டாமா?
நான் இவ்வளவு பேசிவிட்டேன். நான் இங்கிருந்து என் வீட்டுக்கு போய் இறங்குறதுக்குள்ள புதிய கட்சி தொடங்கியவர்கள் என்னை விமர்சிப்பார்கள். என்னை மட்டுமில்லை, திராவிட பெண்களை எல்லாம் விமர்சிப்பார்கள். நான் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதுங்கள்.
என் வீட்டில் நானும் அம்மாவும்தான் இருக்கோம். அப்பா ஷூட்டிங் போய்விட்டார் என கூறி தனது நுங்கம்பாக்கம் வீட்டு முகவரியை திவ்யா சொன்னது அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாகம் செய்தனர்.
மேலும் திவ்யா கூறுகையில், "நீ அரசியலுக்கு வந்தால் சேகர்பாபுவை போல இருக்க வேண்டும் என என் அப்பா கூறினார். அதற்கு நான் எப்போதும் ஒரே ஒரு சூரியன்தான். அது போல் ஒரே ஒரு சேகர்பாபுதான் இருக்க முடியும். அவரை போல செயல்பட முடியாது" என்றேன். இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். திவ்யா, ஊட்டச்சத்து நிபுணர். இவர் மகிழ்மதி என்ற ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார்ய அதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவை வழங்கி வருகிறார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications