தீபாவளி பண்டிகைக்கு ரூ.438 கோடிக்கு மது விற்பனை.. கடந்த ஆண்டை விட பெரும் சரிவு.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் சுமார் ரூ.29 கோடி அளவிற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து மதுவிற்பனை சரிந்து வரும் நிலையில், அதன் பின்னணியில், தனியார் மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்கள் காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடைகளில் தான் பலரும் மது அருந்தி வந்தனர். அங்கு மதுவிற்பனை கொடிக்கட்டி பறந்து வந்தது. அரசுக்கும் வசூல் குவிந்து வந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ள நிலையில், அங்கு தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடப்பது வழக்கம் என்கிறார்கள். வார இறுதி நாட்களின் அது ரூ.200 கோடியாக அதிகரிக்கும் என்றும். பண்டிகை நாட்கள் என்று வரும்போது, ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியாக உயரும் என்று டாஸ்மாக் வட்டாரங்களில் சொல்கிறார்கள்..

tasmac diwali 2024 liquor

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ந்தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ந்தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 12-ந்தேதி தீபாவளி பண்டிகை வந்தது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனையானதாக சொல்லப்படுகிறது. அதை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டு ரூ.29 கோடியே 10 லட்சம் அளவுக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மண்டல வாரியாக மதுவிற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.. இதன்படி சென்னை மண்டலத்தில் கடந்த 30ம் தேதி அன்று 47.16 கோடிக்கும், 31ம் தேதி 54.18 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாம். மதுரை மண்டலத்தில் 30ம் தேதி 40.88 கோடிக்கும், 31ம் தேதி 47.73 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 30ம் தேதி 39.81 கோடிக்கும், 31ம் தேதி 46.51 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சேலம் மண்டலத்தில் 30ம் தேதி 38.34 கோடிக்கும் 31ம் தேதி 45.18 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 30ம் தேதி அன்று 36.40 கோடிக்கும், 31ம் தேதி 42.34 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவிற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு தீபாவளியை ஒப்பிடும் போது, இப்போது மதுவிற்பனை வெகுவாக சரிந்துள்ளது. தீபாவளி பண்டிகை மது இறுதியில் வந்தது ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததை ஒப்பிடும் போது, 1,500 குறைந்ததும் ஒரு காரணம் என்கிறார்கள்..

ஆனால் அதேநேரம் டாஸ்மாக் கடைகள் குறைந்தாலும் மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், அங்கு விற்பனை அதிகரித்துள்ளதால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது, அதாவது அரசுக்கு மது விற்பனை மூலம் வர வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. எனினும் தனியார் மதுக்கடைகள் மது விற்பனை விவரம், அரசு மதுக்கடைகளின் மது விற்பனை விவரங்கள் குறித்து முழுமையாக தெரிந்தால் தான் டாஸ்மாக் குறித்து சந்தேகங்கள் தெளிவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+