தீபாவளி டிக்கெட் முன்பதிவு.. தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக்.. நொடியில் மாயமான ரயில் டிக்கெட்டுகள்
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு (Diwali train booking) இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தன் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் பலருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் விழுந்தது. குறிப்பாக நெல்லை, குமரி, அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.
வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெள்ளிக் கிழமைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் அக்.17 முதல் 21 ஆம் தேதி வரை முன்பதிவு செய்ய முடியும். சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப அக்.21 முதல் 23 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு புறப்படும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று சனிக்கிழமை இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கிய அக்டோபர் 16-ஆம் தேதிக்கான முன்பதிவில், சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
சென்னை முதல் தென்மாவட்டங்களான மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கான ரயில்களில் தற்போது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளே மட்டுமே உள்ளன. இன்று (ஆக. 17) ரயிலில் அக்டோபர் 17 (வெள்ளிக்கிழமை) பயணிக்க விரும்புவோர் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.
இன்று காலை 8 மணிக்கு அக்டோபர் 17 ஆம் தேதி வெள்ளிக் கிழமைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தன் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் பலருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் விழுந்தது. குறிப்பாக நெல்லை, குமரி, அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. நாளையும், நாளை மறுநாளும் அக்டோபர் 18 மற்றும் 19 தேதிகளுக்கான முன்பதிவுகள் நடைபெறும்.
ஆம்னி பஸ்கள் டிக்கெட் விலை
பெருநகரங்களில் வசிக்கும் மக்கள், சென்னை, கோவை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதனால், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பஸ்கள் டிக்கெட் விலையை பலமடங்கு உயர்த்தி மக்களை ஏமாற்றுகிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடைசி நேரம் டென்ஷன் வேண்டாம்
ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், கடைசி நேரத்தில் டிக்கெட் இன்றி தவிப்பதைத் தவிர்க்க, மக்கள் முன்கூட்டியே டிக்கெட் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த ஆண்டுக்கான தீபாவளி அக்டோபர் 20 (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அக்டோபர் 16 முதல் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க உள்ளவர்களின் முன்பதிவு தொடங்கி வேகமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்.
உங்களுக்கு ரயில் டிக்கெட் இன்னும் கிடைக்கவில்லை என்றால், நாளைய முன்பதிவுக்குத் தயாராகுங்கள். டிக்கெட் முன்பதிவு விறுவிறுவென ஆகி வருவதால், முன்கூட்டியே அதற்கான திட்டமிட்டலை தயார் செய்து சரியான நேரத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்து பயன்பெறவும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications