தீபாவளி கிஃப்ட்.. தென் மாவட்ட பயணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரயில்வே.. புக்கிங் தொடங்குது ரெடியா இருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க ஏதுவாக இந்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் செல்லும் வழித்தடம், முன்பதிவு எப்போது தொடங்குகிறது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தீப ஒளி திருநாள் எனப்படும் தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

diwali special train southern railway

திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்து, ரயில்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் காலியாகவிட்டன. இதனால், பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி, செண்ட்ரல் - செங்கோட்டை, தாம்பரம் - கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

* தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (சூப்பர் பாஸ்ட்):

வண்டி எண் 06049 தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து வரும் 29, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12ம் தேதி 00.35 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் பகல் 12.15க்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06050 கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில், கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12ம் தேதிகளில் மாலை 3.35க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30க்கு சென்னை தாம்பரம் வந்து சேரும்.

செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* சென்னை சென்ட்ரல் - செங்கோட்டை சிறப்பு ரயில்:
வண்டி எண் 06005 / 06006 : சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 30 ஆம் தேதி மற்றும் நவம்பர் 6 ஆம் தேதிகளில் செங்கோட்டைக்கு இந்த ரயில் செல்லும். செண்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை விருதுநகர், திருத்தங்கல், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவல்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு 31 ஆம் தேதி காலை 9.20 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில், அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 7 ஆம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து இதே வழித்தடத்தில் சென்னை செண்ட்ரல் வரை இயக்கப்படும்.

* சென்னை செண்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்:
வண்டி எண் 06001/06002: சென்னை செண்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 29 ஆம் தேதி மற்றும் நவம்பர் 5 ஆம் தேதி இயக்கப்படும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும்.

செண்ட்ரலில் இருந்து இரவு 11.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருதச்சலம் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூருக்க்கு வந்து சேரும்.

இந்த ரயில்களுக்கான் முன்பதிவு நாளை அதாவது 23 ஆம் தேதி ( புதன்கிழமை ) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+