Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஐபி-க்கே இந்த நிலை.. திமுக படகில் தத்தளிக்கும் எம்எல்ஏக்கள்..தேமுதிகவால் தூக்கத்தை தொலைத்த பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் மிக அருகில் வந்து கொண்டிருக்கிறது.. கூட்டணி பரபரப்புகளும் ஓடி கொண்டிருக்கின்றன.. இதில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேமுதிக திமுகவுக்குள் வந்ததில் இருந்தே பல்வேறு சலசலப்புகளும் முணுமுணுப்புகளும் ஆங்காங்கே எழுந்து வருவதாக தெரிகிறது. அதுகுறித்து எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

தொகுதிகளைப் பகிர்ந்தளிப்பதில் திமுக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DMDK DMK Premalatha Vijayakanth Ponmudi EV Velu Tamil Nadu Elections 2026 TN Election special DMK Alliance Troubles Villupuram Political Crisis Kallakurichi District Politics Sitting MLA Panic 2026

இந்த நகர்வு, திமுக கூட்டணிக்குள் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில், தேமுதிக கேட்கும் தொகுதிகள் பலவற்றில் ஏற்கனவே திமுக அல்லது கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் வலுவாகச் செயல்பட்டு வருகின்றனர்..

திமுக - தேமுதிக

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது, தேமுதிக முதலில் 12 தொகுதிகளைக் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், தற்போதைய சூழலில் திமுக தலைமை 6+1 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் எனத் தெரிவித்ததாம்..

இருந்தாலும் கூட்டணிக் கட்சிகள் ஏதேனும் வெளியேறினால் 8 தொகுதிகள் வரை வாய்ப்புள்ளதாக திமுக தலைமை நம்பிக்கை அளித்துள்ளது. இந்நிலையில், தேமுதிகவின் பட்டியல், திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்குப் பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளது.

முதலாவதாக உளுந்தூர்பேட்டை

கடந்த 2021 தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், 25,908 வாக்குகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆனாலும், இந்த முறை திமுக கூட்டணியில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று தேமுக வலுவாகக் கணக்கு போடுகிறது. இதற்காக தொகுதி உடன்பாட்டில் முரண்டு பிடித்து வரும் தேமுதிகவால் அங்கு தற்போது காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தொகுதி கைமாறினால் தங்கள் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியில் காங்கிரஸ் தரப்பு தவிப்பில் ஆழ்ந்துள்ளது.

இரண்டாவதாக ரிஷிவந்தியம்

அடுத்து, விஜயகாந்த் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க-வின் முக்கிய இலக்காக உள்ளது. அங்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் வசந்தம் கார்த்திகேயன், 3வது முறையும் வென்றால் அமைச்சராகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருக்கிறார்.

இருந்தாலும் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு, தன்னுடைய தீவிர ஆதரவாளரான வசந்தம் கார்த்திகேயனை உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று உடன்பிறப்புகள் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது ரிஷிவந்தியம் தி.மு.க-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவதாக திருக்கோவிலூர்

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கோட்டையான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி பெரும் அரசியல் விவாத பொருளாக மாறியிருக்கிறது. 2011 தேர்தலில் தேமுதிக சார்பில் இங்கு வெற்றிபெற்ற எல்.வெங்கடேசன், ஆளுங்கட்சிக்கு நிகராகச் செலவு செய்யக்கூடிய வசதியானவர்.

தவிர, தற்போது விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும் இருப்பதால், திருக்கோவிலூர் தொகுதியை எப்படியாவது கைப்பற்ற தேமுதிக விருப்பம் தெரிவித்து வருகிறது.

அதேசமயம், 2016-ல் விழுப்புரம் தொகுதியைக் கூட்டணிக்குத் தள்ளிவிட்டதுபோல, இந்த முறை தே.மு.தி.க-வுக்குத் தாரை வார்த்துவிட்டு நிம்மதி அடையலாம் என்று பொன்முடி தரப்பு நினைக்கிறது. ஆனால், விழுப்புரத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் லட்சுமணனும் மாவட்டச் செயலாளராக இருப்பதால், அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி

ஒருவேளை, பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டால், தன் மகனுக்காக விக்கிரவாண்டி தொகுதியைக் கேட்கும் முயற்சியிலும் அவர் தீவிரம் காட்டி வருகிறாராம்.. இதனால், அந்த தொகுதியின் தற்போதைய திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா கடும் அதிருப்தியிலும், புலம்பலிலும் ஆழ்ந்திருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன..

திமுக என்ற படகில் உட்கட்சிப் பஞ்சாயத்தில் கூட்டணிப் படகு கவிழாமல் இருக்க, திமுக தலைமை மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் இந்தத் தொகுதிப் பிரச்சனை திமுக - தேமுதிக உறவில் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய பெரிய கேள்விக்குறியாக உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+