நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி; விஜயகாந்த் திட்டவட்டம்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இதன் மூலம் எந்தக் கட்சியுடனும் தேமுதிக கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதை தெளிவுப்படுத்தி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்பமனு கொடுக்கலாம் என விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி
டிசம்பர் மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் விருப்பமனு பெறும் படலம் தொடங்கியிருப்பதோடு கூட்டணி விவகாரம் கூட ஏறத்தாழ இறுதிசெய்யப்பட்டு சீட் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என அரசியல் நோக்கர்கள் உட்பட பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் வழக்கம் போல் துணிச்சலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

தனித்து போட்டி
அதாவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ள விஜயகாந்த் யாரையும் நம்பியும் தாம் கட்சி தொடங்கவில்லை என்பதை சூசகமாக உணர்த்திவிட்டார். மேலும், தேமுதிகவில் அடிப்படை உறுப்பினராக இருந்தால் கூட எந்தப் பதவிக்கும் போட்டியிட விருப்பமனு அளிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார். டிசம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விருப்பமனு வழங்க கால அவகாசமும் அளித்திருக்கிறார்.

விஜயகாந்த் பேச்சு
திமுக கூட்டணியில் அல்லது பாஜக கூட்டணியில் தேமுதிக இணையக் கூடும் என அரசியல் ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் அதனை தவிடுபொடியாக்கும் வகையில் அதிரடி காட்டியிருக்கிறார் விஜயகாந்த். மக்களுடனும் இறைவனுடம் மட்டுமே இந்த விஜயகாந்த் கூட்டணி வைப்பேன் என அவர் உடல்நலம் நன்றாக இருந்த போது பல மேடைகளில் பேசியிருப்பது திரும்பிப்பார்க்கத் தக்கது.

தொண்டர்கள்
இதனிடையே தனித்து போட்டி என்ற முடிவை தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. தற்போதுள்ள அரசியல் சூழலில் தனித்துக் களம் கண்டால் அது கட்சிக்கு தான் பின்னடைவை தரக்கூடும் என பலரும் அஞ்சுவதும் கவனிக்கத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications