சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாரிசு அரசியல், குடும்ப அரசியல் குறித்த கடும் விமர்சனம் .. சுதீஷ் யாருங்க பிரேமலதா மேடம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா மேடம் இப்படி செய்யலாமா?-தேமுதிக தொண்டர்கள்

    சென்னை: வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த தேமுதிகவின் பிரேமலதா தற்போது தனது தம்பியான சுதீஷுக்கு கள்ளக்குறிச்சியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார்.

    தேமுதிக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து கெத்தாக இருந்தவர் விஜயகாந்த். முதல் தேர்தலிலேயே தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றவர். அது போல் கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவையே ஓரங்கட்டினார்.

    இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு விஜயகாந்தின் செயல்பாடுகளால் தோல்வியை தழுவினார். அதன்பின்னர் 2016-ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு விஜயகாந்தை சூசகமாக அழைத்தும் அவரை அங்கு செல்லவிடாமல் தடுத்ததில் "பெரும்" பங்கு பிரேமலதாவுக்கு உண்டு.

    எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க.. தீபாவிடம் விருப்ப மனு கொடுத்த டிரைவர் ராஜா

    வாரிசு அரசியல்

    வாரிசு அரசியல்

    இதனால் அவர் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். அந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா திமுகவை குடும்பக் கட்சி என்றும் வாரிசு அரசியல் செய்கிறது என்றும் கடுமையாக விளாசினார். அது போல் அவ்வப்போது ராமதாஸையும் தனது மகனுக்காக பாடுபட்டு சீட் வாங்குகிறாரே தவிர அவர் சார்ந்த சமுதாய மக்களுக்காக அவர் பாடுபடவில்லை என எத்தனையோ முறை விமர்சனம் செய்துள்ளார்.

    வேதனை

    வேதனை

    ஆனால் அதிமுக கூட்டணியில் இணைந்த பிரேமலதா தனது தம்பிக்காக கள்ளக்குறிச்சி தொகுதியை விட்டுக் கொடுக்காமல் வாங்கி அவரையே வேட்பாளராகவும் நேற்று விஜயகாந்தை வைத்து அறிவிக்க வைத்தார். தேமுதிகவில் உண்மையாக உழைத்தவர்களுக்கு சீட் வழங்காமல் தனது தம்பியை எம்பியாக துடித்து அவருக்கு சீட் வழங்கிவிட்டதாக கட்சியினர் வேதனையில் உள்ளனர்.

    ஆலோசனை

    ஆலோசனை

    இது முழுக்க முழுக்க விஜயகாந்துக்கு பிடிக்காத முடிவு என்றாலும் பிரேமலதாவின் கட்டாயத்தின்பேரில் அவரும் இந்த முடிவுக்கு உடன்பட வேண்டியதாகிவிட்டது. இன்னும் சிலரோ கேப்டன்கிட்ட எங்கள் அவங்க ஆலோசனை செய்றாங்க. எல்லா முடிவையும் அக்காவும் தம்பியும் தானே எடுக்கிறார்கள். அதனால்தானே இந்த கட்சி தற்போது அதள பாதாளத்தில் 4 சீட்டுக்காக பேரம் பேச வேண்டிய நிலைக்கு சென்றுவிட்டது.

    குறை கூறுதல்

    குறை கூறுதல்

    திமுகவை குடும்ப அரசியல் வாரிசு அரசியல் என விமர்சனம் செய்த பிரேமலதாவிடம் சுதீஷ் மட்டும் யார் என கேட்டுச் சொல்கின்றனர் அவரது கட்சியினர். அது மட்டுமில்லாமல் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்த போது தேவையில்லாமல் விஜய பிரபாகரனை அடுத்த தலைவராக சித்தரிக்க இறக்கிவிட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். ஆமாம், நியாயம்தானே அடுத்தவர்களை குறை கூறுவதற்கு முன்னர் தாம் என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும் பிரேமலதா மேடம்.

    English summary
    DMDK going in a heir politics by announcing Sudheesh as Kallakurichi candidate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X