ஆளுநர் ரவியை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்.. திமுக அரசுக்கு எதிராக அடுக்கடுக்காக புகார்!
சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தொடர்ந்து. இதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை கிண்டி ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் ரவியிடம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "விஜயகாந்த் குரு பூஜை பேரணிக்கு 20 நாட்களுக்கு முன்பே காவல்துறையிடம் அனுமதி கேட்ட நிலையில், ஒரு நாளுக்கு முன்பாக அனுமதி மறுத்தார்கள். ஆனாலும், அமைதியான முறையில் பேரணியை நடத்தி முடித்தோம்.
தமிழ்நாடு முழுக்க மக்களுக்கு பொங்கலுக்கு ரூ.1000 வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அமைதியான முறையில் நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். சுதீஷ் உட்பட 120க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், திமுக மட்டும், ஆளுநருக்கு எதிராக முதல் நாள் ஆர்ப்பாட்டம் அறிவித்துவிட்டு, மறுநாள் நடத்துகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த ஏன் அனுமதி தரப்படவில்லை? நாங்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்றால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உண்மையைக் கொண்டுவர திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. ஞானசேகரன் திமுக அனுதாபி தான் என முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் கூட அசிங்கம் இல்லாமல் ஒப்புக்கொள்கிறார். திமுக அனுதாபிக்கு இவர்கள் எப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள்? இதுதொடர்பாக ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் மேலூரில் வராது என மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலூர் தாலுகாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்தார். அதேநாளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்திருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications